logo

திருச்சியில் CPI(M) கட்சி சார்பாக இன்று தீப்பந்தம் ஏந்தி போராட்டம் !

திருச்சியில் இன்று காலை திருவெறும்பூர் மலைக்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் 40,41 வது வார்டு மக்களின் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி CPI(M) கட்சி சார்பாக ‘தீப்பந்தம் ஏந்தி போராட்டம்’ நடைப்பெற்றது.
இந்த போராட்டத்தில் 40,41 வது வார்டின் வீடுகள் அனைத்திற்கும் புதிய காவேரி குடிநீர் வழங்கு, தெருச்சாலைகளின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைத்துக் கொடு, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்திடு, பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து.. மாநகராட்சியே இணைப்பு வழங்கு, தனியாரிடம் கொடுத்து கொள்ளையடிக்க விடாதே,
‘D’ நகரில் ரேசன் கடை, மாரியம்மன் கோவிலில் சமுதாயக்கூடம், நறுங்குழலி நாயகி நகரில் சீரணி அரங்கம் ஆகியவற்றை ஏற்று கொண்டபடி அமைத்துக் கொடு, பலகோடி ரூபாய் செலவில் குடமுழுக்கு செய்த எறும்பீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் சாக்கடை குளமாக காட்சியளிப்பது ஏன்? குளத்தை சீரமைத்திடு, திருவெறும்பூர் மேம்பாலம் இருபுறமும் சர்வீஸ் சாலையை சீர்படுத்து, திருவெறும்பூர் மேம்பாலம் மழைநீர் தெருவிற்குள் புகுவதை தடுத்து நிறுத்து, நறுங்குழலி நாயகி நகரில் 100 அடிக்கு ஒரு மின் கம்பம் அமைத்துக்கொடு.. ஆகிய கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி, கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைப்பெற்றது.
-திருச்சி பிரசன்னா

36
407 views