logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 01/12/2026.

1/12/2025 திங்கட்கிழமை (கார்த்திகை 15)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ ஆளுநர் மாளிகைக்கு பெயர் மாற்றுவதை விட, சிந்தனை மாற்றமே தேவை-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

🗞️ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்

🗞️ இன்று சுபமுகூர்த்தம் தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

🗞️ செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது தூய்மையான ஆட்சி தரப்படவில்லையா-எடப்பாடி பழனிசாமி கேள்வி

🗞️ காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

🗞️ சிவகங்கை மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு

🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி படிவங்கள் ஒப்படைக்க டிசம்பர் 11 ஆம் தேதி வரை அவகாசம்- தேர்தல் ஆணையம்

🗞️ பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம்-ராமதாஸ்

🗞️ இலங்கையில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக மீட்பு

🗞️ துணை கலெக்டர்,போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்

🗞️ ரயில் ஓட்டுநர்களுக்கான மைலேஜ் படியை உடனடியாக உயர்த்தி வழங்க கோரிக்கை 48 மணி நேரத்திற்கு உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

🗞️ 2025-26 ஆம் ஆண்டுக்கான சம்பா மற்றும் இதர பயிர்களை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

🗞️ இலங்கையில் நிலச்சரிவால் கிராமத்தின் ஒரு பகுதியே புதையுண்டு 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

🗞️ ராஜ் பவன் என்ற பெயரை லோக் பவன் என மாற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

🗞️ தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

10
812 views