
“தென்காசி மாவட்ட காங்கிரஸ்: அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் – நவம்பர் 29 அன்று குற்றாலத்தில்”
தென்காசி மாவட்ட காங்கிரஸின் அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 29 அன்று நடைபெறுகிறது
தென்காசி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் வருகிற 29.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. S. பழனிநாடார் MLA அவர்களின் தலைமையிலும், மேலிட பார்வையாளர் மற்றும் சண்டிகர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு H. S. லக்கி அவர்களின் முன்னிலையிலும் நடைபெறுகிறது.
கூட்டத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின்
முன்னாள் தலைவர்கள்,
இந்நாள் – முன்னாள் செயலாளர்கள்,
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இந்நாள் – முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள்,
மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்,
முன்னணி அமைப்புகள் மற்றும் பிரிவு தலைவர்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள்,
வட்டார, நகர, பேரூர், கிராம கமிட்டி தலைவர்கள்
மற்றும் அனைத்து தேசிய நெஞ்சங்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அமைப்பு மறுசீரமைப்பு பணிகளுக்கு தங்கள் கருத்துகளை பகிருமாறு மாவட்ட தலைவர் S. பழனிநாடார் MLA அவர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.