logo

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு – 50க்கும் மேற்பட்டோர் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு – 50க்கும் மேற்பட்டோர் காயம்

நேற்று காலை சுமார் 10 மணி அளவில் கடையநல்லூர் செல்லும் வழியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த துயரச்சம்பவத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் இதுவரை கிடைத்த தகவலின்படி சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் முதலுதவி சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த உடனடியாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் சலீம், மாவட்ட பொருளாளர் ரஷீத் கான், மாவட்ட பொதுச் செயலாளர் சர்தார், மாவட்ட துணைத் தலைவர் காஜா மைதீன், நகர தலைவர் ஜேக்கப் அருணோதயம், நகர பொதுச் செயலாளர் சையத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

46
1643 views