அரசு மருத்துவமனையில் ரத்தம் கொடுக்க வந்த நபர்களை குண்டு கட்டாக தூக்கி காவல் துறை அராஜக செயல் பொதுமக்கள் ஆவேசம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பாக 23/11/2025 அன்று காலை 9 மணி அளவில் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதை தொடர்ந்து முறையாக அனுமதி கோரி காவல்துறைக்கும் சுகாதார துறைக்கும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது கட்சியின் சார்பில் கட்சி கொடிகள் சாலை இருபுறங்களிலும் நடப்பட்டிருந்தன ஆங்காங்கே கட்சி சார்பில் சில பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங் கட்சி சார்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் ரத்த தானம் கொடுக்க கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளனர் இதை தொடர்ந்து திருவாலங்காடு ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர் தனசேகரன் அவர்கள் கட்சி கொடிகள் பேனர்கள் எல்லாவற்றையும் அகற்றினால் மட்டுமே நான் முகாம் நடத்த அனுமதிப்பேன் இல்லை எனில் ஒருவர் கூட ரத்தம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார் இதைத்தொடர்ந்து கட்சியினர் சாலையில் கோஷம் முழக்கங்களை எழுப்பினர் தடுக்காதே தடுக்காதே ரத்தம் கொடுத்து பொதுமக்களின் உயிர் காக்க வந்த எங்களை தடுக்காதே அழிக்காதே அழிக்காதே அப்பாவை மக்கள் உயிர்களை பறிக்காதே இதைத்தொடர்ந்து திருத்தணி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கந்தன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதை தொடர்ந்து மருத்துவமனை உள்ளே சென்று மீண்டும் நீண்ட நேரம் காத்திருந்து ரத்தம் எடுக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் சாலை நோக்கி படையெடுத்தனர் சாலையில் அமர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர் அதில் ரத்தம் கொடுக்க அனுமதி கொடு என்று திமுக அரசே அரசியல் செய்யாதே அவல நிலை ரத்தம் கொடுக்க வந்த எங்களை தடுத்து நிற்பது அவல நிலை என்று கோஷங்கள் எழுப்பினர் இதில் டிஎஸ்பி கந்தன் அவர்கள் வலு கட்டாயமாக ரோட்டில் இருந்தவர்களின் சாட்டை காலரை பிடித்துக் கொண்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றினார்கள் இவர்கள் அனுமதி பெறவில்லை ஆகையால் நான் இவர்களை கைது செய்கிறேன் ரத்தம் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் உள்ளே செய்திருந்தது இவர்கள் கொடுக்காமல் திரும்பவும் சாலைக்கு வந்து விட்டனர் என்றார் அவருக்கு எதிர் முழக்கங்களாக தீண்டாமையா தீண்டாமையா நாம் தமிழர் சார்பில் ரத்தம் கொடுத்தால் தீண்டாமையா வேண்டாமா வேண்டாமா எங்கள் ரத்தம் அரசை உனக்கு வேண்டாமா அநீதி அநீதி அரசே இது அநீதி ஏவாதே ஏவாதே காவல்துறை என்ற ஏவல் துறையை அடக்குமுறைக்கு எங்கள் மீது ஏவாதே என்றனர் இதைத் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது இதற்கிடையே திருத்தணி காவல் ஆய்வாளர் திருவள்ளூர் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மகளிர் காவல் ஆய்வாளர் மலர்வி மற்றும் அதிரடி படையினரை அங்கே குவித்தனர் இதைத்தொடர்ந்து கட்சியின் கொடிகளையும் பேனர்களையும் அகற்றிய பின்னர் ரத்தம் கொடுக்க மீண்டும் உள்ளே வந்தனர் காலை முதலே ரத்தம் கொடுக்க காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர் இதைத்தொடர்ந்து அங்கு இருந்த கட்சியினரை வைத்து சுமார் 12 மணி அளவில் ரத்தம் கொடுக்க ஏற்பாடானது செய்யப்பட்டது இதை தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது இவர்கள் வரும் உள்நோயாளிகளுக்கு இடையூறாக செயல்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது இதற்கு கட்சியினரிடம் கேட்டபோது அவர்கள் தான் அனுமதி கொடுத்தார்கள் உள்ளே போதிய இடம் இல்லை என்று கூறியிருந்தால் நாங்கள் வெளியேவே பந்தல் போட்டு முகாமை சிறப்பாக நடத்தி இருப்போமே என்கின்றனர் கட்சி நிர்வாகிகள் நான் களத்தில் ஆய்வு செய்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தது சுகாதாரத் துறை ஆய்வாளரை நித்திய சுந்தரி தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது இது குறித்திய தகவல் எனக்கு இரவு 7 மணி அளவில் கூறப்பட்டது அதை தொடர்ந்து நான் அரசு சார்பில் விளம்பர பதாகை தயார் செய்து வைத்திருந்தேன் மீண்டும் காலையில் BMO பிரகலாதன் நான் கேட்டபோது அந்த நிகழ்ச்சி சில அரசியல் கால் புணர்ச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது நீங்கள் அங்கே செல்ல வேண்டாம் என்று அவர் கூறியதாகவும் ஆகையால் அரசு தரப்பில் எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யவில்லை அவ்வாறே நிறுத்தப்பட்டது என்கின்றனர் அதற்கிடையே பல மணி நேரம் மருத்துவர் பிரகலாதனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவர் கைபேசியை எடுக்க மறுத்து விட்டதாகவும் எங்கு சென்றார் என்பதே தெரியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர் மருத்துவர் பிரகலாதன் ஆளும் கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முக்கிய புள்ளிகளின் உறவினர் எனவும் தெரியவந்தது ஆகையால் தான் ரத்தம் கொடுக்க வந்த பொதுமக்கள் இடையே கட்சி பாகுபாடு பார்த்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர்களை திருப்பி அனுப்ப முயற்சித்ததாகவும் கூறப்படுகின்றது இதைத்தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரத்தம் கொடுத்துள்ளனர் அப்போது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது ஆலும் கட்சியான திமுக சமீபத்தில் திருவாலங்காடு வட்டாரத்தில் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்திருந்தது அதில் ரத்தம் கொடுக்க ஆறு நபர்களை பங்கேற்றனர் ஆனால் நாங்கள் சமூக மக்கள் இன் உயிர் காக்க வேண்டும் என்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எங்கள் கட்சி தோழர்களுடன் ரத்த தானம் கொடுக்க வந்தோம் இது நடந்தால் அவர்களுக்கு அவமானம் அவப்பெயர் உண்டாகி விடுமோ என்ற அச்சத்தில் இது போன்ற அல்ப காரியங்களை திமுகவினர் செய்து வருகின்றனர் என்று பகிரங்க குற்றச்சாட்டு முன் வைத்தனர் எது எப்படி இருந்தாலும் மருத்துவர்கள் ரத்தம் கொடுக்க வந்த நபர்களிடம் பேனர் கட்சி கொடி அகற்றினால் மட்டுமே ரத்தம் எடுப்போம் எனக் கூறியது அங்கு இருந்த பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது இந்த செயலில் ஈடுபட்ட திருவாலங்காடு அரசு மருத்துவ மனை இன் மருத்துவர் தனசேகரனையும் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மருத்துவர் பிரகலாதனையும் பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர் சமூக ஆர்வலர்கள்