
வாக்குத் திருட்டுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் எழுப்பிய பெரிய குரல்...
வாக்குத் திருட்டுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் எழுப்பிய பெரிய குரல் - 1 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் மக்களின் கையெழுத்து படிவங்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, புதுடெல்லி இந்திரா பவனில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு ) திரு.கே.சி.வேணுகோபால் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை MLA., காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் திரு.கிரிஷ் சோடங்கர், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் திரு.ராஜேஷ் குமார் MLA., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு.தங்கபாலு,
அகில இந்திய செயலாளர்கள் திரு.சூரஜ் ஹெக்டே,டாக்டர் வி.கே. அறிவழகன்,
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக் குழு தலைவர் திரு.சா.பீட்டர் அல்போன்ஸ்,பொருளாளர் திரு.ரூபி மனோகரன் MLA., துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
என்றும் மக்கள் நல சமூக சேவையில், அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஏ.கே. பாண்டியன் அவர்கள் வழியில் தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் நல்லூர் நாயகன் கே எஸ் கணேசன் அவர்கள்.