அனைத்து தொழிற்சங்கத்தின் உழைக்கும் பெண்கள் அமைப்பின் தலைவர்கள்,CPIM கட்சியின் மாநில செயலாளருடன் சந்திப்பு...
இன்றைய தினம் (19/11/2025) ,தமிழ்நாடு அரசு, ஆபத்து விளைவிக்கக் கூடிய 20 தொழில்களில் கர்ப்பிணி பெண்களைத் தவிர, பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தலாம் என்று அரசு அறிவித்துள்ள ஆணையை திரும்ப பெற கோரி ,அனைத்து கட்சி தலைவர்களையும்,அனைத்து தொழிற்சங்கத்தின் உழைக்கும் பெண்கள் அமைப்பின் தலைவர்கள் சந்தித்து மனு அளித்து வந்த நிலையில், CPIM கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் அவர்களை சந்தித்து அரசின் உத்தரவை திரும்ப பெற ஆதரவு தரக்கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்துவதாக கூறினார்.என்றும் மக்கள் நலப் பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.