logo

சபரிமலை சீசனில் குற்றாலம் உணவகங்கள், சிப்ஸ்–அல்வா உற்பத்தி நிலையங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சபரிமலை சீசனில் குற்றாலம் உணவகங்கள், சிப்ஸ்–அல்வா உற்பத்தி நிலையங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கும் குற்றாலம் ஆண்டுதோறும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலத்தின் முக்கிய சீசனாகக் கருதப்படுகின்றது. அதேபோல் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சபரிமலை சீசனாக அமைய, இந்தக் காலத்தில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குற்றாலம் வழியாக பயணம் செய்கின்றனர்.

சபரிமலை சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குற்றாலத்தை வந்துசெல்லும் சூழலில் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக குற்றாலத்தில் செயல்பட்டு வரும் சிப்ஸ் மற்றும் மஸ்கோத் அல்வா தயாரிக்கும் நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் தயாரிப்பு மையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் ஒருங்கிணைந்த சோதனையை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

சீசன் காலங்களில் சில இடங்களில் தரமற்ற உணவுப்பொருள்கள் விற்பனையாகும் சம்பவங்கள் நடப்பதாகக் கூறி, இதைத் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், குற்றாலம் வரும் மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் விரைவான திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

9
392 views