logo

வந்தவாசி தொகுதிக்கு வராத எம்எல்ஏ! எந்நேரமும் பூட்டி கிடக்கும் அலுவலகம்!

வந்தவாசி தொகுதிக்கு வராத எம்எல்ஏ! எந்நேரமும் பூட்டி கிடக்கும் அலுவலகம்!

கடந்த அதிமுக ஆட்சியில் திமுக எம்எல்ஏ ஆகி, "இரண்டாவது முறை நான் எம்எல்ஏ ஆனால் வந்தவாசி தொகுதியில் தேனாறும் பாலாறும் ஓடும்" என சொல்லி ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களை ஏமாற்றி எம்எல்ஏ ஆகி தொகுதிக்கும், திமுக தலைமைக்கும் பட்டை நாமத்தை சாத்தியவர் திரைப்பட தயாரிப்பாளர் அம்பேத்குமார். தொடர்ந்து படத் தயாரிப்பிலும், முதலீட்டிலும் தீவிரமாக செயலாற்றி வரும் அம்பேத்குமார் தன்னை நம்பியுள்ள தன் சமுதாய மக்களையே ஏமாற்றி விட்டவர் என்ற குற்றச்சாட்டு தொகுதியின் நாலாபுறமும் எதிரொலிக்கிறது. வந்தவாசி தொகுதியை பொருத்தவரை வளர்ச்சிப் பணிகள் குறிப்பாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை, நகர மன்றமும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாமல் மழை நீரோடு கழிவு நீர் கலந்து ரோட்டில் ஓடும் அவலநிலை அனைத்து வார்டுகளிலும் அள்ளபடாத குப்பைகள் என நாற்றமடிக்கும் நகராட்சியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை நகராட்சி மீட்டிங் நடக்கும் போதெல்லாம் கவுன்சிலர்களின் (திமுக உட்பட) கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இதற்காகவே இரு திமுக கவுன்சிலர்களை கட்சியில் இருந்து நீக்கினார்கள். பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வந்தவாசி நகராட்சி செயலாற்றி வருகிறது என அனைத்து கட்சி நிர்வாகிகளும் கூறுகின்றனர். மாவட்ட செயலாளரும், ஆரணி எம்பியுமான தரணிவேந்தன் என்ன செய்கிறார் காது குத்தல், மூக்கு குத்தல்,கும்பாபிஷேகத்திற்கு போவது இதைத் தவிர வேறு எந்த வேலையும் எங்கள் எம்பிக்கு இல்லை என உடனிருப்பவர்களே தலையில் அடித்து கொள்கின்றனர். மேலும் தங்கள் ஜாதியினரை தவிர அடுத்த ஜாதியினரின் அழைப்பை நிராகரிப்பது நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைக்காமல் செய்வது, கேவலமாக நடத்துவது இது போன்ற எம்பியின் செயல்களால் நிச்சயமாக வந்தவாசி,செய்யாறு,ஆரணி தொகுதிகளில் திமுக தோற்கடிக்கப்படும் என்கின்றனர். இது சம்பந்தமான புகார்கள் உளவுத் துறையின் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது அனேகமாக தேர்தலுக்கு முன்னரே மாவட்ட செயலாளர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

- இறைநேசன்

0
0 views