logo

ஊத்துக்கோட்டை பேரூர் அம்பேத்கர் நகரில் பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பாகமுகவர்கள் கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பங்கேற்பு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில் "என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்கு சாவடி என்ற தலைப்பில் பாகமுகவர்கள் கூட்டம் அம்பேத்நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேரூர் துணைச் செயலாளர் பார்த்திபன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன்,மாவட்ட துணைச் செயலாளர்
உமாமகேஸ்வரிவேணு, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன்,ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி,முன்னாள் மாவட்ட பிரதிநிதி பா.து.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.இதன் பின்னர், நிர்வாகிகளுக்கு மினிட் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஊத்துக்கோட்டை பேரூராட்சிமன்ற தலைவர்
அப்துல்ரஷீத்,துணைத் தலைவர் குமரவேல்,வார்டு கவுன்சிலர்கள்
கல்பனாபார்த்திபன்,
கோகுலகிருஷ்ணன், வெங்கடேசன்,சுமலதாநரேஷ், வார்டு செயலாளர் ராஜேந்திரன்,பொன்னேரி தீபன்,பெரியபாளையம்
ஜி.டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

12
22 views