திருச்சியில் ‘வந்தே மாதரம்’ 15௦ ஆம் ஆண்டின் வெற்றி விழா, மற்றும் சுதேசி உறுதி மொழி நிகழ்ச்சி
இன்று காலை திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில், வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்களால் இயற்றப்பட்ட நமது இந்திய தேசிய நாட்டு பாடல் ‘வந்தே மாதரம்’ 15௦ ஆம் ஆண்டினை வெற்றிகரமாக கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் கே..என். கே.கே.ஒண்டிமுத்து தலைமை தாங்கினார்.. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர்கள் மா.காளீஸ்வரன், ஏ.என்.எம். அழகேசன், லீமா சிவக்குமார், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்டத் தலைவர் என்.சீனிவாசராவ், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் சிட்டிபாபு, ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப்ப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜி.டி தினகர், நெசவாளர் பிரிவு மாவட்டத் தலைவர் கே.பி. கண்ணன், மத்திய அரசு நலத்திட்டப்ப் பிரிவு மாவட்டத் தலைவர் சாரதி கார்த்தி ஆகியோருடன் பாரதிய கட்சியினர் பெருமளவில் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் சுதேசி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.-
-திருச்சி பிரசன்னா