
தேவர் நினைவிடத்தில்,
நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பி.எல். ஏ. ஜெகநாத் மிஸ்ரா, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை நடைபெற்றது. நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார்.
முன்னதாக 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து சென்று தொண்டர்களுடன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் உருவ சிலைக்கும், கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள
தேவர் சிலைகளுக்கும்
மாலை அணிவித்து மரியாதை செய்யதனர். நிகழ்ச்சியில், நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் அபுதாஹீர், மாநில பொறுப்பாளர்கள் கம்பம் பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஒருங்கினைப்பாளர்கள், டாக்டர் திருப்பதி, பெத்தனசாமி,
போக்குவரத்து தொழிற்சங்க பிரிவு அமைப்பாளர் நந்தகுமார் மாநில இளைஞர்அணி துணைச்செயலாளர் அருண்குமார் கம்பம் நகர செயலாளர்கள் சுப்பிரமணி, அய்யர்,மற்றும் மாநில
மாவட்ட,நகர,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.