logo

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

செங்கம் வேளாண் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த 44 பஞ்சாயத்துகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலைமை அலுவலகமாக செங்கம் வேளாண் அலுவலகம் இயங்கி வருகிறது.

விவசாயிகளுக்கு தேவையான விதைப்பொருட்கள் மட்டும் அல்லாது அதற்கான இடுபொருட்களும் இங்கிருந்து விவசாயிகள் பெறப்பெற்று அதனை பயன்படுத்தி வருகின்றனர்

சமீப காலமாக செங்கம் வேளாண் அலுவலகம் விவசாயிகளுக்காக இயங்காமல் தனியார் அக்ரோ கடைகளுக்கு துணை போவதாகவும் அதேபோன்று வேளாண் அலுவலகத்திலேயே பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உதாரணத்திற்கு 100 கிலோ எடை கொண்ட விதை மணிலா சுமார் 1200 ரூபாய் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகளுக்கு நான்காயிரத்தி ஐநூறு ரூபாய் எந்த ஒரு ரசதியும் இல்லாமல் விற்பனை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

மேலும் பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வேளாண் அலுவலரின் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை செவி சாய்க்காமல் அங்கிருந்து வேளாண் அலுவலர் நழுவிச் சென்றார்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வேளாண் அலுவலகத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் குளறுபடிகளையும் தனியார் உரக்கடைகளில் நடைபெறும் குளறுபடிகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்

135
1303 views