logo

பாமக கட்சியின் மாநில செயல் தலைவராக திருமதி ஸ்ரீகாந்தி அவர்கள் நியமனம்...

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அக்கா ஸ்ரீகாந்தி அவர்களின் நியமனத்தை பாமக தென்காசி மாவட்ட செயலாளர் பா. சிங்கராயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில் ; பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயல் தலைவராக அக்கா ஸ்ரீகாந்தி அவர்களை நியமனம் செய்த மக்கள் போராளி, சமூக நீதி காவலர், மருத்துவர் ராமதாசு ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு,அக்கா ஸ்ரீகாந்தி அவர்களின் கட்சி பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .மாநில செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள அக்கா ஸ்ரீகாந்தி அவர்களின் வரவு பாட்டாளி மகளிர் சங்கத்திற்கும், கட்சிக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் எழுச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை என்று வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.வாழ்த்து செய்தியை நன்றியுடன் பகிர்ந்து கொள்பவர் சமூகநீதி பேரவை தலைவர், வழக்கறிஞர் , இலத்தூர் கோ.கிருஷ்ணன் எம்ஏ.எல்எல் பி அவர்கள்.

26
1658 views