logo

தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில் பிருங்கிமலை கோபால்

தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில்
-பிருங்கிமலை கோபால்

ஏசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் என்கிறவர் இந்தியாவிற்கு வந்ததாகவும் அவரை பிருங்கிமலையில் (இன்றைய பறங்கிமலை)பிராமணர்கள் கொன்றதாகவும் கட்டுக்கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பலமுறை நிருபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தமிழக கிறிஸ்தவ மூடர்கள் அந்தக் கட்டுக்கதையை மீண்டும், மீண்டும் சொல்லி அதனை உண்மையாக்க முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

“The Commerce Between Roman Empire and India” என்கிற புத்தகம் ரோமாபுரிக்கும், தென்னிந்தியாவிற்கும் இடையே நிகழ்ந்த வர்த்தக உறவுகளை, சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களுக்கு வந்த யவனர்கள் போன்றவர்களைக் குறித்து எழுதப்பட்ட அருமையானதொரு ஆராய்ச்சி நூல். அந்த நூல் புனித தாமஸ் என்பவர் வடமேற்கு இந்தியாவரை மட்டுமே வந்தவர் என ஆணித்தரமாகக் கூறுகிறது.

பொது யுகம் நான்காம் நூற்றாண்டில் தச்சுத் தொழில் புரிபவரான இன்னொரு “புனித” தாமஸ் என்பவர் சோழ அரசனின் அரண்மனையைக் கட்டுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர் என்கிறது! ஆக, இந்தியாவில் தச்சு வேலை செய்ய வந்தவனை புனிதனாக்கி நம் காதில் பூ சுற்றிவிட்டார்கள்!

பக்கம் 61, 62 இதற்கான ஆதாரமாக இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

https://archive.org/detai…/in.ernet.dli.2015.107895/page/n77


#பிருங்கிமலை #பிருங்கிமலைகோபால் #sivanadiyargopaal #சிவனடியார்கோபால் #sjgopaal #birungimalai #sjgopal #இந்து #hindu #hinduism #பரங்கிமலை

0
35 views