BREAKING NEWS: ரயிலில் பயங்கர தீ விபத்து (VIDEO).
#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. AC பெட்டி ஒன்றிலிருந்து புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டு உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீ மளமளவென 3 பெட்டிகளில் பரவியது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு, ரயில்வே படையினர் ஈடுபட்டுள்ளனர். பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை.