logo

சனாதனத்தைப் பாதுகாக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! இந்நிகழ்வு மக்களுக்கு அளிக்கும் செய்தி என்ன? Journalist SJ Gopaal

சனாதனத்தைப் பாதுகாக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு!
இந்நிகழ்வு மக்களுக்கு அளிக்கும்
செய்தி என்ன? Journalist SJ Gopaal

இந்திய மக்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய ஒரு நிகழ்வு கடந்த 6.10.2025 அன்று, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வில் நடந்துள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் (B.R. Gavai) மீது ராகேஷ் கிஷோர் என்ற சன்னாதன வெறிபிடித்த வழக்கறிஞர் தன் காலில் அணிந்திருந்த 'ஷூ'வைக் கழற்றி வீசி எறிந்தார். அதிர்ச்சியில் நீதிமன்றம் உறைந்த
போது, பாதுகாவலர்கள் விரைந்து சென்று குற்றவாளியைப் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி விட்டு வெளியேறிய சனாதனி "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது!" என்று கத்திக் கொண்டே வெளியேறியிருக்கிறார். தலைமை நீதிபதியின் மீதே செருப்பு வீச்சு நடக்கும் என்றால், இனி யாருக்கு என்ன நடக்காது? இந்துத்துவவாதிகள் இத்தகைய வன்முறைகளை நீதிமன்றத்திற்கு வெளியில்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போது நீதிமன்றங்களுக்கு உள்ளேயும் நிகழ்த்தத் தொடங்கி இருக்கிறார்கள். தனக்கு நேர்ந்த அவமானத்தை சகித்துக் கொண்டு, பிறர் வழக்கறிஞர்களையும் சக நீதிபதியையும் பார்த்து பி.ஆர்.கவாய், "கவனத்தை சிதற விடாதீர்கள், இவை என்னை பாதிக்கவில்லை" என்று கூறிவிட்டு, அமைதியாக விசாரணையைத் தொடர்ந்திருக்கிறார். காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளி அடுத்த மூன்று மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். வீசப்பட்ட காலணியையும் பத்திரமாகக் கொண்டு போய் அதை வீசியவரிடமே சேர்த்து விட்டார்கள். பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் பதிவு அமைப்பு குற்றவாளிக்குத் தற்காலிகமாக பணித்தடை விதித்திருக்கிறது.

நீதியரசர் பி.ஆர். கவாயின் மீது நடந்த தாக்குதல் முயற்சிக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைமை நீதிபதியிடம் குசலம் விசாரித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பது:

“உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி.ஆர். கவாய் அவர்களிடம் பேசினேன். முன்னதாக இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் வெகுண்டெழச் செய்துள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

இது போன்ற சந்தர்ப்பத்திலும் நீதிபதி கவாய் வெளிப்படுத்திய அமைதியை நான் பாராட்டினேன். நீதியின் மாண்புகளிலும், நமது அரசியலமைப்பு உணர்வை வலுப்படுத்துவதிலும் அவர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.”
*இந்நிகழ்வு கண்டிக்கத்தக்கதா? தண்டிக்கத்தக்கதா?*
இந்நிகழ்வு கண்டிக்கத்தக்கது என்று கூறுகிற அளவிற்கு நரேந்திர மோடிக்கு பரந்த மனப்பான்மை இருக்கிறது. அதற்கு மேல் எந்த சட்ட நடவடிக்கை பற்றியும் அவர் பேசவில்லை. குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கமும் மோடி வகையறாக்களுக்கு இல்லை.

இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று கூறும்போது, “அந்த சம்பவத்தால் நானும் எனது சக நீதிபதியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களை பொறுத்தவரை அது ஒரு மறந்துபோன அத்தியாயம்” என்று கூறியிருக்கிறார். எனினும் சக நீதிபதி உஜ்ஜல் புயான், ``இது நீதிமன்ற அமைப்பு மீதான தாக்குதல்'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந் நிகழ்வைப் பெரிது படுத்தாமல் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், இக்குற்றச் செயல் குறித்து சட்டங்களும் பெருந்தன்மையாக இருக்க வேண்டிய தேவை என்ன?

செருப்பு வீசிய நபர்,
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் தன் கருத்தை இப்படி பதிவு செய்து இருக்கிறார்:

“செப்டம்பர் 16 அன்று தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், 'சிலையை மீட்டெடுக்க கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கேலி செய்து மனுவை தள்ளுபடி செய்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்னை காயப்படுத்தியது.

நீங்கள் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் அதை கேலி செய்யாதீர்கள். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது அநீதி... எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எதையும் செய்யவில்லை, கடவுள் என்னை அதைச் செய்ய வைத்தார். "

தான் செய்த குற்றத்தை மறைத்து பெரிய நியாயவான் போல பேசக்கூடிய திறனை அந்த வழக்கறிஞர் பெற்றிருக்கிறார். தன் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்ற அச்சமே அவருக்கு இல்லை. ஏனென்றால், அதிகாரத்தைக் கையாளுவதும் தங்கள் ஆட்கள் தான் என்ற உணர்வு அவருக்கு இந்த துணிவை தருகிறது.

#பிரச்சனை_என்ன?*
மத்திய பிரதேசம் கஜராஹோ கோயில்கள் வளாகம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுப் பாரம்பரிய சின்னமாக (UNESCO World Heritage Khajuraho Temple Complex) ஏற்பளிக்கப்பட்டுள்ளது. அது இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India) பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கிறது. அங்கு உள்ள பல சிலைகள் இடைக்காலத்தில் முகலாயர் படைகளுடன் நடந்த போரின் போது சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள ஜவாரி கோயில் (The Javari Temple) ஒரு சிலையின் (விஷ்ணு) தலை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொல்லியல் துறையின் பராமரிப்பிலுள்ள கலைக் கருவூலங்கள் அப்படியே பாதுகாக்கப்படும். தலை உடைக்கப்பட்ட அந்த சிலைக்கு தலை சரி செய்யப்பட்டு கருவறைக்குள் வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மனு, இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பு விதிகளுக்கு
(Conservation Rules) எதிரானது என்று தொல்லியல் துறையால் முன்னமே மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், தான் பெரிய பக்திமான் என்றும், ஜாரவி கோயிலில் உள்ள விஷ்ணு சிலை மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனு செய்தார். முன்னமே தொல்லியல் துறை இத்தகைய மாற்றத்தை செய்ய முடியாது என்று மறுதலித்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றமும் அதையே கூறியது. அந்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
"இது முற்றிலும் விளம்பரம் தேடும் ஒரு வழக்கு...
அந்த இறைவனிடமே ஏதாவது செய்யுங்கள் என்று கேளுங்கள். விஷ்ணு கடவுளின் பெரும்பக்தர் என்று உங்களை நீங்கள் சொல்வதாக இருந்தால், அவரை வழிபடும்போது வேண்டுங்கள்: சிறிது தியானம் செய்யுங்கள்.
("This is purely a publicity interest litigation. Go and ask the deity himself to do something. if you are saying that you are a strong devotee of Lord Vishnu, when you pray and do some meditation."). என்று பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு கூறிவிட்டது.

நீதிபதி பி ஆர் கவாய் அமர்வு கூறிய கருத்தால் எரிச்சல் அடைந்த சனாதனிகள் விண்ணுக்கும் மண்ணுக்குமாகக் குதித்தார்கள். ஊடகங்கள் மூலமாக நீதிபதிக்கு எதிரான கருத்தைப் பரப்பினார்கள். கடவுளை காரணம் காட்டி பார்ப்பனர் நலம் பேணும் காரியங்களை சாதித்துக் கொள்வது அவர்கள் வழக்கம். தொல்லியல் துறை அனுமதிக்காத நிலையில், நீதிமன்றம் இந்த பிரச்சனையில் உத்தரவிட முடியாது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டி, மறுத்துவிட்ட நிலையில், இறைவனிடம் வேண்டுகோள் வைத்து கதை நடக்காது என்பது சனாதனிகளுக்கு நன்றாகவே தெரியும். செப்டம்பர் மாதம் முதல் அவர்கள் பரப்பி வந்த வெறுப்பு பிரச்சாரங்களின் விளைவுதான் அக்டோபர் 6-ஆம்நாள் நீதிபதி மீது செருப்பு வீசும் நிகழ்வாக வடிவெடுத்தது.

சனாதனிகளின் திட்டமிட்ட பிரச்சாரத்தின் நோக்கத்தை நீதிபதி அறிவார். செருப்பு வீசப்பட்ட தினத்தன்றே தம்முடைய கருத்தையும் பதிவு செய்தார்: "நீதிமன்றங்களில் நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது" என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார்.
செய்தித்தாள்களில் வெளியான படி, நீதிபதி பி.ஆர்.கவாய் கூறிய செய்தி இவ்வளவுதான் :
'விஷ்ணு மீது உண்மையிலேயே பக்தி இருந்தால், சிலையை சீர்படுத்தக் கோரி, அவரிடமே பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 'சிலையை சீர்படுத்தும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் இல்லை' என கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அனைத்து மதத்தின் மீதும் தனக்கு மரியாதை இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடனடியாக விளக்கமும் அளித்தார். இந்நிலையில், கடவுளிடம் வேண்டுகோள் வைத்து எதுவுமே நடக்காது என்பதை ஏனைய நாத்திகவாதிகளைப் போலவே சனாதனவாதிகளும் அறிவார்கள். இதை நன்கு அறிந்திருக்கும் அந்த சனாதன வெறி பிடித்த, மனுதாரரான வழக்கறிஞர் விஷ்ணு கடவுளை வணங்குவதை விட செருப்பு வீசுவது மேலானது என்று கருதி நீதிபதி மீது செருப்பு வீசினார். இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி கவாய் பேசும் போது, வழக்கு விசாரணையின் போது வாய்மொழியாக கூறும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது என கவலை தெரிவித்தார்.

நீதிபதி கவாய் தாம் அனைத்து மதங்களையும் மதிப்பவர் என்பதை தெளிவு படுத்தினார். ஆனால் பார்ப்பன கட்டளைகளை தலைமேற்கொண்டு நிறைவேற்றித் தர வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை என்பதுதான் சனாதனைகளின் பார்வை. பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோயில் கட்டுதல் பிரச்சனையிலும், சேது சமுத்திர திட்டத்திற்குத் தடையாக எழுந்த ராமர் பாலம் இருப்பது குறித்த பிரச்சனையிலும், பார்ப்பன வாதத்தை அப்படியே தீர்ப்பாக எழுதி தன் சனாதன விசுவாசத்தை உச்சநீதிமன்றம் காட்டிக்கொண்டது.

#நீதிபதி_கவாய்_மீதான_காழ்ப்புணர்வு!*

நீதிபதி பி.ஆர். கவாய் மகாராஷ்டிராவை சேர்ந்த பட்டியல் சாதி (SC) சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் இந்திய நீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது தலித் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அவருடைய குடும்பப் பின்னணி அம்பேத்கர் சிந்தனையை ஏற்றுக் கொண்ட ஒன்று. அவர் ஒரு பௌத்தர், அண்ணல் அம்பேத்கரின் அழைப்பை ஏற்று பெருவாரியாக பௌத்தத்திற்கு தலித் மக்கள் மதம் மாறியபோது, அவ்வாறு மதம் மாறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பி.ஆர்.கவாய் . அவருடைய சமயம் 'நவயான' புத்த மதம். ஆனால் அவர் எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்திய உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் இருக்கிறார்கள். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் (OBC), பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) அனைவருக்குமாக 4 நீதிபதிகளே இருக்கிறார்கள். இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில், இதுவரை தலைமை நீதிபதியாக இரண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் மட்டுமே பொறுப்பேற்று இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, 9 ஆண்டுகள் கழித்து பி.ஆர்.கவாய் அப்பொறுப்பிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

அவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக 2025 மே 14ஆம் நாள் பதவியேற்றார்: 2025 நவம்பர் 23-ஆம் நாள் ஓய்வு பெற இருக்கிறார். குறுகிய காலத்திற்கு மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக 2019 முதல் 2025 வரை பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 1985- லிருந்து 2019 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தின் நிலையான நீதிபதியாக இருந்திருக்கிறார்
அவருடைய தந்தை ஆர்.எஸ். கவாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பீகார், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். பி. ஆர். கவாய் மீதான காழ்ப்புணர்வும், எதிர்ப்புணர்வும் அவர் தாழ்ந்த சாதிக்காரர் என்ற உளவியலில் உருவானவை.

#பி_ஆர்_கவாய்_வழங்கிய_சில_தீர்ப்புகள் !
பி.ஆர். கவாய் வரவேற்கத்தக்க பல தீர்ப்புகளையும் வழங்கி இருக்கிறார்; விமர்சனத்திற்குரிய சில தீர்ப்புகள் வழங்கிய அமர்விலும் இருந்திருக்கிறார்.
. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கி இருந்த அரசியல் சட்டப் பிரிவு 370 -ஐ நீக்கம் செய்ததை உறுதி செய்த அரசியல் சட்ட அமர்வில் பி.ஆர். கவாயும் இருந்தார்.

2023 -இல், அவதூறு குற்ற வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட இருந்த வழக்கில், அதை நிறுத்தி வைத்த மூன்று நீதிபதிகளுள் அவரும் ஒருவர். இவ் வழக்கில், பாசிச சனாதனவாதிகளின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே குறித்து வெளியிட்ட ட்டுவீட்டுகள் குற்றம்தான் என்று தீர்மானித்த அமர்வில் பி.ஆர்.கவாயும் இருந்தார்.

2002 - குஜராத்தில் மோடி முதலமைச்சர் ஆக இருந்தபோது, இஸ்லாமியர்களின் மீதானஇனப்படுகொலை நடந்தேறியது. இப்படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி 2022-இல் விடுவிக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயல்பாட்டாளரும், 'சிட்டிசன்ஸ் ஃபார் பீஸ் அண்ட் ஜஸ்டிஸ்' என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான தீஸ்தா செதல்வாட் மீதே போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு குஜராத் உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்த நிலையில், 2023. ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பிணை வழங்கியது பி.ஆர், கவாய் அமர்வு.

2024 -ஆம் ஆண்டு,கட்டிடங்களை புல்டோசர் கொண்டு உடைப்பது தொடர்பாக, அரசின் செயல்பாடு அரசியல் சட்டக் கூறு: 19 மற்றும் 21 வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயல் இது என்று அறிவித்தார். இது இயற்கை வழங்கியுள்ள உரிமைக்கு எதிரானது என்றும், வலியவன் செய்வதே சரி என்றிருந்த பழங்காலத்தை நினைவூட்டுகிறது என்றும் கண்டனம் செய்தார். சட்டவிரோதமான கட்டிடங்களை இடிப்பதாக இருந்தாலும், அதற்கும் முறையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வரையறுத்தார். இவ்வாறு பல நல்ல தீர்ப்புகளுக்காக பி.ஆர். கவாய் குறிப்பிடப்படுகிறார்.

#உச்சநீதிமன்ற_நீதிபதியைவிட_சனாதனியே_அதிகாரம்_மிக்கவர்!*

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷின் காலணியை எடுத்து போலீசார் அவரிடமே திருப்பி கொடுத்து விட்டனர். காவல்துறை அவரை விசாரித்து விட்டு அனுப்பி விட்டது. எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கிழமை நீதிமன்றமாக இருந்தாலும் கூட, அந்த நீதிமன்றத்திற்கான மதிப்பும், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீசிவிட்டு, ஒருவர் எந்த பாதிப்பும் இல்லாமல் செல்ல முடிகிறது என்றால், அந்த மனிதன் அணிந்திருக்கும் பாதுகாப்பு கவசம் எது ? ஒருவன் பார்ப்பனமாக பிறப்பதும், பார்ப்பன சேவையில் இருப்பதும், சனாதனியாக வலம் வருவதும், அவனுக்கு மதிப்பையும், சமூகத் தகுதியையும் தருவதோடு, எதையும் செய்துவிட்டு, எந்த பாதிப்பும் இல்லாமல் செல்ல முடிகிற பாதுகாப்பை வழங்குகிறது. எதிர்கால இந்துராஷ்டிரத்தில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் முன்னோட்டம் தான் தலைமை நீதிபதி மீதான செருப்பு வீச்சு. சனாதனத்தின் ஆட்சியில் உச்சநீதிமன்றமும் பார்ப்பனியத்தின் ஓர் ஏவலாள் தான். பார்ப்பன கட்டளைகளை நிறைவேற்ற முன்வராத எந்த நீதிபதிக்கும் இதுதான் நிகழும்.

#செருப்பு_வீசியவர்_ஓர்_இஸ்லாமியராக_இருந்திருந்தால்?*

இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒருவேளை காலணியை ஆசாத் (அதாவது இஸ்லாமியர்) தூக்கி வீசியிருந்தால் நிலைமை வேறு வகையாக இருந்திருக்கும் " என்றார்.
அவருடைய பெயர் ராகேஷ் என்றில்லாமல் ஆசாத் என்றிருப்பின், டெல்லி போலீசார் என்ன செய்திருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார். "அவர்கள் ஏன் 'உபா' சட்டத்தைப் பிரயோகிக்கவில்லை. இந்த விசயத்தில், ஏன் கடுமையான பயங்கரவாத ஒழிப்பு சட்டம் பயன்படுத்தப்படவில்லை?" என்றும் ஒவைசி கேட்டார். குற்றவாளி ஆசாத் என்றால், அவரை அண்டை நாட்டுடன் (பாகிஸ்தான் நாட்டுடன்) பா.ஜ.க. தொடர்புபடுத்தி இருக்கும் என்றும் ஒவைசி ஆவேசத்துடன் கூறினார் என்பதை செய்தித்தாள்கள் பதிவு செய்துள்ளன.

அவருடைய கேள்வி சரியானது தான். செருப்பு வீசியவர் இஸ்லாமியராக இருந்திருந்தால் 'உபா' சட்டம் பாய்ந்திருக்கும்; என். ஐ. ஏ முடுக்கிவிடப்பட்டிருக்கும். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையே கொல்ல முயற்சிக்கிறார்கள்! பாகிஸ்தான் சதி! என்று ஓலமிட்டு இருப்பார்கள். பாகிஸ்தானுடன் போர்! போர்! என்று ஆர்ப்பரித்து இருப்பார்கள்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். "தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவம் வெட்கக் கேடானது. தலைமை நீதிபதி மீது காலணி வீசியது, ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்." என்று பதிவு செய்துள்ளார்.

SCBA (Supreme Court Bar Association)
ராகேஷ் கிஷோரின் நடத்தை "நீதித்துறை சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல்" மற்றும் "தொழில்முறை நெறிமுறைகளின் கடுமையான மீறல்" என்று கூறியது. "இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் தொழில்முறை நெறிமுறைகள், கண்ணியம் மற்றும் கண்ணியத்தை கடுமையாக மீறுவதாகும்; இந்த நடத்தை நீதித்துறை சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலுக்குச் சமம் என்று கூறியிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? வழக்கறிஞர் பணி மீது தற்காலிகத் தடை என்பது ஒரு தண்டனை அல்ல. தீவிரமான குற்றவியல் சட்டங்களின் கீழ் இதற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

முக்கிய காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, இது அரசியல் அமைப்பின் மீது ஆன தாக்குதல் ; நீதிபதி கவாயுடன் தேசம் நிற்க வேண்டும் என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், 'அவர் தலைமை நீதிபதி: நடந்திருப்பது நகைச்சுவைக்கான விஷயம் அல்ல; இது நீதிமன்ற அமைப்பு மீதான தாக்குதல்' என்கிறார்.

#நீதிபதி_மீதான_தாக்குதலுக்கு_நீதித்துறையே_காரணமாம்!*
#பாஜக_கூறுகிறது!*
இவ்வளவு தலைவர்களும், பல்வேறு கட்சிகளும் நீதிபதி பி. ஆர். கவரய் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்திருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறது?
'பாரதிய ஜனதா கட்சி - BJP' - தன் தமிழ் முகநூலில் ( 7 அக்டோபர்) இப்படி கருத்தை பதிவு செய்திருக்கிறது:
"வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடந்து உள்ளது. காரணம் என்ன?
சமீப காலமாக இந்திய நீதித்துறைமீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது..."

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் பதிவான 22 வழக்குகளையும் உடனே எடுத்துக் கொண்டு உடனே விசாரணையைத் தொடங்கியது நீதியா? நியாயமா?...
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு மத நிர்வாகத்தில் பிற மதத்தவர் இருக்ககூடாது என்று எங்காவது சொல்லப்பட்டு உள்ளதா?"

2025 ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இதை கருத்தில் கொண்டு நீதித்துறையின் மீது பகையுணர்வைக் கொட்டுகிறது பாஜக :
"ஒரு வரைவு சட்டத்துக்கு குடியரசு தலைவர் குறித்த காலத்தில் ஒப்புதல் அளிக்க மறுத்தால் சட்டம் ஆகி விடும் என்று நீதிமன்றம் முடிவு செய்ய முடியுமா?"
குறிபிட்ட காலத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வில்லை என்றால் அது சட்டம் ஆகி விடும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கேயும் இ‌ல்லை. "

பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய முகநூலில் உச்சநீதிமன்றத்தின் மீதான வெறுப்பைத் கொட்டி இருக்கிறது. தாங்கள் விரும்புவதை உச்சநீதிமன்றம் ஏற்க வேண்டுமே தவிர, அது விசாரித்து நீதி வழங்கக் கூடாது என்பது இந்த இந்துத்துவவாதிகளின் பார்வை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சிப்பதை கண்டிக்கக்கூடிய மனநிலை கூட இவர்களுக்கு இல்லை. இழிவுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற எண்ணமே இவர்களுக்கு இல்லை.

#இந்திய_அரசியல்_சட்டத்தின்_மீதான_தாக்குதல்!*

பி.ஆர்.கவாய் மீதான காலணி வீச்சு சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.அவர் ஒரு தனி நபர் அல்ல; இந்திய நீதித்துறையின் அடையாளம்.
உலக அளவில் சனநாயக அமைப்பில் அதிகாரங்கள் மூன்று பெரும் பிரிவுகளாக அடையாளம் காணப்படுகின்றன. அவை சட்டத்தை இயற்றும் துறை (நாடாளுமன்றம்), சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறை (நிர்வாகத் துறை), சட்டத்திற்கு விளக்கம் அளிக்கும் துறை (நீதித்துறை) ஆகியவை. தற்கால ஜனநாயக அரசியல் அமைப்புகளில், இவை ஒன்றை ஒன்று விஞ்சிடாத அளவில், ஒரு அதிகாரப் பிரிவின் மீது மற்றொரு அதிகார பிரிவுக்கு கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசியல் சட்டம் இதற்கு முன்னோடியானது.
இந்திய குடியரசு தலைவர் நிர்வாகத்துறையின் அதிஉயர் பொறுப்பில் இருக்கிறார். அது போன்றே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதித்துறையின் அதிஉயர் பொறுப்பில் இருக்கிறார். இந்தப் பொறுப்பும் தகுதியும் இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் மீது, அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது ஒரு தாக்குதல், தாக்குதல் முயற்சி அல்லது அவமதிப்பு என்பது, இந்திய அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதலாகும், அது இந்திய நீதித்துறையின் மீதான தாக்குதல் ஆகும். அதனால்தான், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் 'தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி நகைச்சுவை காண விஷயம் அல்ல; நீதிமன்ற அமைப்பு மீதான தாக்குதல் அது' என்று கருத்தறிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றம்தான் இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்; இந்திய அரசியல் சட்டத்தின் கூறுகளுக்கு விளக்கங்களை அதுவே அளிக்கிறது; எந்த அரசியல் சட்ட புதிர்களுக்கும் இறுதி விளக்கம் என்பது உச்சநீதிமன்றத்தினுடையது. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் அளித்தாலும், இந்திய அரசியல் சட்டத்திற்கு ஏற்ப அது இருக்கிறதா என்பதை ஆய்ந்து, அச்சட்டம் செல்லுமா செல்லாதா என்று அறிவிக்கும் (Judicial Review) பெரும் பொறுப்பும், அதிகாரமும் உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் கூறு -32 கீழ், இந்திய குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்திடமே இருக்கிறது. இந்தியா என்பது 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) நிலவும் நாடு என்று கூறப்பட்டால், அந்த சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்திடமே இருக்கிறது. ஜனநாயகமான நிர்வாகத்தின் உறுதிப்பாட்டைக் காக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. ஆகவேதான் உச்ச நீதிமன்றத்தை இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் ( Guardian of the Constitution) என்று அரசியல் அறிஞர்கள் விவரிக்கிறார்கள். இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி என்பது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல். இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. சம்மந்தப்பட்ட நபர் அதிகபட்ச குற்றச்சாட்டுக்கும் தண்டனைக்கும் உரியவர்.

#இந்திய_அரசியல்_சட்டம்_உயர்ந்ததா_அல்லது_சனாதனம்_உயர்ந்ததா?*
ஆண்டாண்டு காலமாக மக்களுடைய உரிமைகளையும், மானுட மாண்பையும், மானிட அடையாளத்தையும் சிதைத்து வந்த சனாதன தர்மம்,ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் சற்றே தளர்ச்சியுற்றிருந்தது. ஆர்.எஸ்.எஸ். - காரர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு இப்போது மீண்டும் துளிர்விட்டு வலுப்படத் தொடங்கி இருக்கிறது. 1950- ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் இப்போது பறித்தெடுக்கப்படுகின்றன. சனாதனவாதிகளின் கட்டளைகளை மீறி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடப்பதாக இருந்தால் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்பதை இப்போது சனாதனவாதிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீதான தாக்குதல் முயற்சி என்பது இந்திய மக்கள் அனைவரின் மீதான தாக்குதல் ; இந்திய மக்களுடைய உரிமைகள் மீதான தாக்குதல். அடியோடு ஒழிக்கப்பட வேண்டிய சனாதனம் இப்போது தாக்குதல் நடத்துகிறது; அது செருப்பு வீசுகிறது; நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்திலும் அதுவே ஆளுகை செய்கிறது. செருப்பு வீசியவர் கடவுள் கட்டளை படியே செருப்பு வீசியதாகத் திமிராகப் பேசுகிறார். எந்த சட்டமும் அவரை ஒன்றும் செய்து விடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிகழ்ந்த செருப்பு வீச்சு முயற்சியை சாதாரணமாக ஒருவர் எடுத்துக் கொள்ள முடியாது. அது ஒவ்வொருவருடைய உரிமைகளின் உத்தரவாதத்தின் மீதான தாக்குதல் என்பதை உணர வேண்டும். இப் பிரச்சனையின் பரிமாணத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு மாநாட்டில் பேசியபோது, நாடு முழுவதும் சனாதனிகள் கொந்தளித்தார்கள்; அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்தார்கள். இப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் மீது செருப்பு வீச்சு முயற்சி நடந்து நிலையில், எவரும் கொந்தளிக்கவில்லை; எவரும் வழக்குகள் பதிவு செய்யவில்லை. இந்த வேறுபாட்டை நாம் உணர வேண்டும்.

பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைவராக, தலைமை நீதிபதியாக மட்டும் இல்லை; அவர் ஒரு தலித்தாகவும் இருக்கிறார். அவர் தலைமை நீதிபதியாக மட்டும் இல்லை; அவர் ஒரு பெளத்தர் ஆகவும் இருக்கிறார்; அம்பேத்கர் கொள்கைகளைப் போற்றுகிறவராகவும் இருக்கிறார். ஆகவே, அவர் அவமதிக்கப்பட வேண்டியவர் தான் ; அவர் மீது செருப்பு வீசினால் பரவாயில்லை; அது கடவுளின் கட்டளை என்று சனாதன வெறியர்கள் கருதுகிறார்கள்.

#சனாதனத்தை_உயர்த்திப்_பிடிக்கும்_பயங்கரவாத_அமைப்புக்கு_தடை_இல்லை!*
#வன்முறையாளர்களுக்கு_தண்டனை_இல்லை!*

ஆர் எஸ் எஸ் அமைப்பு பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது. 1925-ல் உருவாக்கம் பெற்று ,ஆர். எஸ். எஸ். அமைப்பு எப்படியாவது தளர்ச்சி அடைந்திருக்கும் சனாதன வர்ணாசிரம கட்டமைப்பை மீண்டும் நிறுவி விட வேண்டும் என்று தொடர்ந்து வேலை செய்து வருகிறது. ஆனால் அந்த அமைப்பிற்குத் தடையே இல்லை. இந்திய அரசியல் சட்டமும் சனாதன வர்ணாசிரம கட்டமைப்புக்கு தடை போடவில்லை. இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படுகிற காந்தியாரை படுகொலை (1948) செய்த நிலையிலும் கூட ஆர்எஸ்எஸ் நீண்ட காலம் தடை செய்யப்படவில்லை. காந்தியாரை கொலை செய்த நாதுராம் கோட்சே, இந்து மதத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளதால் காந்தியாரை கொலை செய்வது தன்னுடைய தார்மீகக் கடமை என்று பதிவு செய்தான். ஆர் எஸ் எஸ் அமைப்பு காந்தியைப் படுகொலை செய்த போது 18 மாதங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டது. இந்திரா காந்தியின் காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் காலத்தின்போது (1975 - 77) அப்போது மட்டுமே தடை செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிப்பின் போது 1992 - இல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. மும்முறை தடை செய்யப்பட்டாலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு, ஆர் எஸ் எஸ் அமைப்பு அதன் செயல்பாட்டைத் தொடர்கிறது. இது எப்படி நிகழ்கிறது என்பதை நாம் உணர வேண்டும். படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும், குண்டு வெடிப்புகளையும், தலித்துகள் மீதான இஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்களையும், ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவை தடை செய்யப்படவில்லை. இவற்றை எதிர்கொள்ளும் வகையில் இஸ்லாமியர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் பெயரில் ஒருங்கு திரண்டார்கள். அவர்கள் குண்டு வைத்ததாகவோ, தாக்குதல் நடத்தியதாகவோ எந்த செய்தியும் இல்லை. ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 28 செப்டம்பர் 2022 அன்று தடை செய்யப்பட்டது.
சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அந்த அமைப்பே இல்லாமல் அழிக்கப்பட்டி.ருக்கிறது. அதனுடைய வங்கிக் கணக்குகள் அத்தனையும் முடக்கப்பட்டு விட்டன. வெளிப்படையாக வாளையும், துப்பாக்கியையும் சுழற்றிக்கொண்டு பேரணி செல்கிற, ஆயுதப் பயிற்சி செய்கிற, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிற ஆர் எஸ் எஸ் - க்கு நிகழாத ஒன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு நிகழ்கிறது. ஏனெனில், இந்த நாடு நடைமுறையில் இந்து ராஷ்டிரமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், தலைமைகள் இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல தங்கள் சொந்த அரசியலைத் தொடர்வது என்பது மிகவும் ஆபத்தானது. கண்களைத் திறந்து உண்மையான பிரச்சனையை அவர்கள் காண முன்வர வேண்டும்.

#சட்ட_நடவடிக்கைகள்_எடுக்கப்பட_வேண்டும்!*
தலைமை நீதிபதியின் மீதான தாக்குதல் முயற்சி தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல் முயற்சி என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இத்தகைய முயற்சிகளை தண்டிப்பதற்கு அரசியல் சட்டத்திலும், கிரிமினல் சட்டங்களிலும் இடம் இருக்கின்றன.

( 1 ) அரசியல் சட்டம் கூறு 129 மற்றும்142 ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் குறித்து பேசுகின்றன. அரசியல் சட்ட கூறு 129: "உச்சநீதிமன்றம் ஒரு மதிப்புறுத்து நீதிமன்றமாக இருக்கும். அத்தகைய நீதிமன்றம் அனைத்துவித அதிகாரங்களையும் பெற்றிருக்கும். உச்சநீதிமன்றத்தை அவமதிப்பவர்களை அது தானே தண்டிப்பதற்குரிய அதிகாரத்தை பெற்றிருக்கிறது." (Article 129: The Supreme Court to be a court of record: The Supreme Court shall be a court of record and shall have all the powers of such a court including the power to punish for contempt of itself.) உச்சநீதிமன்றத்தை அவமதிப்ப அவர்களை தண்டிக்கும் அதிகாரம் அதனிடமே இருக்கிறது அதை அதன் இயல்பாக இருக்கும் உள்ளார்ந்த அதிகாரம் (inherent power) என்று சட்ட வல்லுநர்கள் விவரிக்கின்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி என்பது சட்டத்தின் கண்களில் மிகப்பெரிய குற்றமாகும். இதைக் கண்டும் காணாமல் போவது என்பன் பொருள் இந்திய அரசியல் சட்டம் செயல்படாமல் போய்விட்டது என்பதுதான்.

( 2 ) நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் - 1971 (Contempt of Court Act -1971): நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் படி குற்றவியல் அவமதிப்பு செய்த ஒருவருக்கு 2000 ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும். ராகேஷ் கிஷோர் என்கிற சனாதன வெறி பிடித்த நபர் இச்சட்டபடி குற்றவியல் அவமதிப்பு செய்தவர். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

( 3 ) வழக்கறிஞர்கள் சட்டம்- 1961 (Advocates Act of -1961) நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நெறிமுறைகளை இச்சட்டம் வகுத்திருக்கிறது. இதை மீறும் நிலையில், வழக்கறிஞர் தொழிலுக்கான உரிமம் பறிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வழக்கறிஞர் உரிமப் பதிவு நீக்கம் செய்யப்படும். இவ்வகையிலும் ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தண்டிக்கப்பட வேண்டும். சனாதனத்துக்கு ஆபத்து என்றால் பார்ப்பன சக்திகள் கொதிக்கின்றன. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் உயர்நிலையை எட்டும் போது, அவர்கள் சனாதனவாதிகளால் இழிவு படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு இழிவுபடுத்தப்படும் போது பார்ப்பனர் அல்லாத அனைவருமே பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும், செயல்பாட்டாளர்களும், பல்வேறு அமைப்புகளும் வெற்றுக் கண்டனம் தெரிவித்தால் போதாது! தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீசிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#தலைமை_நீதியரசர்_மீதான_தாக்குதல்_முயற்சி_மக்களுக்கு_ஒரு_செய்தியை_அளிக்கிறது!*

இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் பல்வேறு சாதிகளாக உடைந்து கிடக்கிறது, இந்த சாதிகள், சாதிப் பிரிவுகள் நீங்காத வரை, சாதிகளுக்கு இடையிலான சாதிப்பகைமையும் மறையாது. பிளவுகளும் பகைமையும் மறைந்து போகாத வகையில் இந்த சனாதன சமூகக் கட்டமைப்பு காக்கிறது. மக்களை மூளை சலவை செய்வதன் மூலமும், சாதி வெறி ஊட்டுவதன் மூலமும், அரசதிகாரத்தின் மூலமும், இந்த சாதிய சமூகக்கட்டமைப்பு காப்பாற்றப்பட்டு வருகிறது. சனாதன தர்மத்தை ஒட்டுமொத்தமாக வீழ்த்தாமல் சாதிப் பாகுபாடுகள் மறையாது. சனாதன கட்டமைப்பு தொடரும் வரை, ஒரு ஒடுக்கப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் சாக்கடை அள்ளினாலும் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தாலும் கிடைக்கும் மரியாதை ஒன்றுதான். நம்முடைய விடுதலை என்பது சனாதனத்தை ஒழித்துக் கட்டுவதில் தான் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதுமட்டுமின்றி, சாதிப் பாகுபாடுகள் மறையாமல் தேசிய இனங்கள் ஓர்மை பெற முடியாது. தேசிய இனங்கள் ஓர்மை பெறாவிட்டால், தேசியஇன விடுதலைப் போராட்டம் என்பது நிகழவே நிகழாது. இறையாண்மை உள்ள தேசங்கள் அமையாது.

#நடந்தது_சனாதனத்தின்_சாதி_வெறி_தாக்குதல்!*
சனாதனதர்மவாதிகள் மக்களுக்கு கூறும் செய்தி என்ன? 'நீ என்ன உயர் பதவியை அடைந்தாலும், நீ ஒரு தலித்துதான்; உன்னை மதிக்க முடியாது!' -என்பதுதான்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் நடத்தியவர் எந்த சாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் அவரை தாக்குதல் நடத்தச் செய்வது சனாதனம். தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒரு தனிநபர் மீதான தாக்குதல் அல்ல; அது பிறப்பின் அடிப்படையிலான கீழ்நிலை சாதிகளின் மீதான தாக்குதல்!

#சனாதன_தர்ம_சாதிய_சமூகக்_கட்டமைப்பை_ஒழிக்காமல்_மனித_மாண்பை_உறுதிப்படுத்த_முடியாது!*

பி. ஆர். கவாய் 2025 மே மாதம் 14ஆம் நாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
பதவியேற்ற போதே, தான் பணி ஓய்வுக்குப் பிறகு வேறு அரசு பதவிகளுக்கு செல்ல மாட்டேன் என்று அறிவித்தார். அதன் பொருள், பணி ஓய்வுக்குப் பிறகு வேறு ஆளுநர் போன்ற உயர் பதவிகள் கிடைக்கும் என்பதற்காக அரசதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை எல்லாம் செய்து கொடுக்கும் ஆள் நான் இல்லை என்பதுதான்.

தலைமை நீதிபதியாக பதவியேற்ற உடன் தம் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவுக்கு சென்றார். ஒரு தலைமை நீதிபதி வருவதாக இருந்தால், அவரை மாநில முதலமைச்சர் அல்லது அடுத்த நிலையில் உள்ள துணை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர், காவல்துறையின் உயர் அதிகாரியான டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்க வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை. இதற்கு என்ன காரணம்? மகாராஷ்டிரத்தில் உள்ள பாஜக அரசு தலைமை நீதிபதி ஒரு தலித்தாக இருப்பதால் அவருக்கு உரிய மரியாதையை அளிக்க முன்வரவில்லை.
தலைமை நீதிபதி வரும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. அவர் தலித் என்பதாலும் தங்களுக்கு பயன்பட மாட்டார் என்பதாலும் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

அவர் நாக்பூரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பிறகு கோயிலை சுத்தம் செய்தார்கள். அவர் தலித் என்பதாலும், புத்த மதத்தவர் என்பதாலும், தீட்டுபட்டுவிட்டதாகக் கருதியே கோயில் சுத்தம் செய்யப்பட்டது.

இதிலிருந்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், ஒருவர் எவ்வளவு படித்து பட்டம் பெற்று அதிஉயர் மரியாதை மிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை சென்றடைந்தாலும், அவரை ஒரு தீண்டத்தகாதவராகவே மதிப்பார்கள் என்பதுதான். இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்றால், சனாதன தர்ம கட்டமைப்பு உயிரோடு இருக்கும் வரை நீடிக்கும். மனிதத்தையும், மனித மாண்பையும்,மானுட சமத்துவத்தையும் நாம் காக்க நினைத்தால், சனாதன தர்மத்தை அழித்தே தீர வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும்!
JOURNALIST SJ GOPAAL

Here is the translation of the Tamil text into Hindi:

***

सनातन धर्म की रक्षा के लिए उच्च न्यायालय के मुख्य न्यायाधीश पर चप्पल फेंकने की घटना!
इस घटना का लोगों को क्या संदेश मिला? पत्रकार एस.जे. गोपाल

भारत के लोगों को आश्चर्य और सदमे में डालने वाली एक घटना 6 अक्टूबर 2025 को भारत के सुप्रीम कोर्ट के मुख्य न्यायाधीश के कोर्ट में हुई। मुख्य न्यायाधीश बी.आर. गावई पर राकेश किशोर नामक सनातन धर्म के उग्रवादी वकील ने अपने पैर में पहने हुए जूते को निकाल कर फेंक दिया। इस सदमे के बीच कोर्ट स्थगित हो गया और सुरक्षा कर्मियों ने तुरंत आकर अपराधी को पकड़ कर पुलिस के हवाले कर दिया। जूता मारने के बाद सनातन धर्म का समर्थक चिल्लाता हुआ बाहर निकला कि "भारत सनातन धर्म का अपमान सहन नहीं करेगा!"। अगर मुख्य न्यायाधीश पर जूता फेंका जा सकता है, तो अब और क्या-क्या नहीं होगा? हिंदूवादी बाहरी तौर पर भी हिंसा करते रहे हैं, अब कोर्ट के अंदर भी ऐसी घटनाएं होने लगी हैं।

मुख्य न्यायाधीश बी.आर. गावई ने इस अपमान को सहते हुए कहा, "ध्यान मत भटकाओ, यह मुझे प्रभावित नहीं करता," और शांतिपूर्वक सुनवाई जारी रखी। पुलिस ने आरोपी को तीन घंटे के भीतर छोड़ दिया और फेंका गया जूता उस व्यक्ति को वापस दे दिया गया। वकीलों के संस्था बार काउंसिल ने आरोपी वकील पर अस्थायी निषेध लगाया है।

मुख्य न्यायाधीश बी.आर. गावई पर हुए हमले की कई नेताओं ने निंदा की है। भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी ने फोन पर उनकी कुशलक्षेम जानी। सोशल मीडिया एक्स पर पीएम मोदी ने लिखा:

"मैंने सुप्रीम कोर्ट के मुख्य न्यायाधीश बी.आर. गावई से बात की। आज सुप्रीम कोर्ट परिसर में उनके ऊपर हुए हमले ने हर भारतीय को झकझोर दिया है। हमारे समाज में ऐसी निंदनीय घटनाओं की कोई जगह नहीं होनी चाहिए। ऐसा पूरी तरह निंदनीय है। ऐसी परिस्थिति में भी न्यायाधीश गावई द्वारा दिखाई गई शांति की मैं सराहना करता हूँ। यह न्याय की गरिमा और हमारे संविधान के प्रति उनकी प्रतिबद्धता को दर्शाता है।"

यह घटना निंदनीय है, लेकिन मोदी ने आरोपी के खिलाफ कोई कानूनी कार्रवाई की बात नहीं की।

मुख्य न्यायाधीश ने कहा: "यह घटना मेरे और मेरे सह न्यायाधीश के लिए बहुत सदमा है, लेकिन हमारे लिए यह एक भुला दी गई घटना है।" सह न्यायाधीश उज्जल भूयान ने कहा, "यह न्यायपालिका पर हमला है"।

राकेश किशोर ने एक न्यूज एजेंसी से अपनी प्रतिक्रिया में कहा कि सितंबर 16 को काजुराहो के जावरी मंदिर में विष्णु की मूर्ति को पुनः स्थापित करने की एक जनहित याचिका दायर की गई थी, जिसे मुख्य न्यायाधीश ने खारिज कर दिया। उन्होंने कहा कि याचिका का खारिज होना अन्यायपूर्ण था क्योंकि उन्हें यह आहत किया।

काजुराहो मंदिर परिसर यूनेस्को की विश्व सांस्कृतिक धरोहर है और पुरातत्व विभाग के संरक्षण में है। वहां कई मूर्तियां ऐतिहासिक युद्धों में क्षतिग्रस्त हो चुकी हैं। विष्णु की मूर्ति का सिर टूटा हुआ है, लेकिन पुरातत्व विभाग इसके संरक्षण नियमों के तहत उसे सही स्थान पर रखने से मना करता है। याचिकाकर्ता ने इसे पुनर्निर्मित करने की मांग की, लेकिन सुप्रीम कोर्ट ने भी इसे अस्वीकार किया।

मुख्य न्यायाधीश बी.आर. गावई ने कहा, "यह केवल प्रचार की राजनीति है, भगवान से प्रार्थना करें। यदि आप विष्णु के बड़े भक्त हैं, तो ध्यान करें।"

मुख्य न्यायाधीश पर चप्पल फेंकने की घटना के बाद सनातन धर्म के उग्र समर्थक भड़क उठे और मीडिया में न्यायाधीश के खिलाफ नकारात्मक प्रचार किया।

अगर चप्पल फेंकने वाला कोई मुस्लिम होता तो क्या होता? AIMIM के नेता असादुद्दीन ओवैसी ने कहा कि अगर आरोपी मुस्लिम होता तो कड़ी कार्रवाई होती और 'यूएपीए' जैसी कठोर आतंकवाद विरोधी धाराओं के तहत मामला दर्ज किया जाता।

तमिलनाडु के मुख्यमंत्री एम.के. स्टालिन ने इस हमले की कड़ी निंदा की और इसे न्यायपालिका पर हमला बताया।

सुप्रीम कोर्ट बार एसोसिएशन ने इसे न्यायपालिका की स्वतंत्रता पर हमला और प्रोफेशनल आचरण का उल्लंघन बताया। कांग्रेस की प्रमुख सोनिया गांधी ने इसे राजनीतिक हमले करार दिया।

कई राजनीतिक दलों ने मुख्य न्यायाधीश बी.आर. गावई की सुरक्षा और सम्मान की मांग की है।

मुख्य न्यायाधीश बी.आर. गावई महाराष्ट्र के दलित बर्ग से हैं और भारत के दूसरे दलित मुख्य न्यायाधीश हैं। वे बौद्ध धर्म के अनुयायी हैं, जो डॉ. अम्बेडकर की प्रेरणा से हुए धर्मांतरण के परिवार से हैं।

उच्चतम न्यायालय के 34 न्यायाधीशों में ओबीसी, एससी, एसटी के लिए सिर्फ 4 न्यायाधीश हैं। बी.आर. गावई 2019 से न्यायाधीश हैं और 2025 मई में मुख्य न्यायाधीश बने। वे 2025 नवंबर में सेवानिवृत्त होंगे।

बी.आर. गावई ने कई अहम फैसले दिए हैं, जैसे जम्मू-कश्मीर की अनुच्छेद 370 को समाप्त करना, राहुल गांधी की अयोग्यता रोकना, और कुछ सामाजिक न्याय संबंधी फैसले।

मुख्य न्यायाधीश पर चप्पल फेंकने वाले राकेश किशोर को कानूनी कार्रवाई से बचाया गया। पुलिस ने जूता वही लौटाया। यह घटनाक्रम कानून व्यवस्था और न्याय के मानदंडों के लिए गंभीर चुनौती है।

AIMIM नेता ओवैसी ने सवाल उठाया कि अगर आरोपी मुस्लिम होता तो क्या कार्रवाई होती? बीजेपी ने इसे न्यायपालिका पर विश्वास का संकट बताया और सोशल मीडिया पर सुप्रीम कोर्ट की निंदा की।

यह हमला भारतीय राजनीतिक संविधान और न्यायपालिका पर हमला है। मुख्य न्यायाधीश पर हमला पूरे देश के लोगों के अधिकारों पर हमला है। भारत एक कानून का शासन वाला देश है, सुप्रीम कोर्ट उसका संरक्षक है।

भारत में सनातन धर्म की जाति व्यवस्था अब भी जीवित है, जो सामाजिक विभाजन और असमानता को मजबूत करती है। दलित जैसे वंचित वर्गों को सम्मान दिलाने पर उन्हें जातिगत ध्रुवीकरण और घृणा का सामना करना पड़ता है।

मुख्य न्यायाधीश बी.आर. गावई ने कहा कि वे किसी धर्म के खिलाफ नहीं हैं, पर वे संवैधानिक मर्यादाओं और न्यायपालिका की गरिमा की रक्षा करते हैं।

सनातन धर्म के कट्टरपंथी दलित और सामाजिक न्याय के लिए काम करने वाले न्यायालय के नेताओं को नीचा दिखाने की कोशिश करते हैं। इसे रोकने के लिए कानून प्रवर्तन का सख्त कार्य जरूरी है।

***

क्या आप चाहेंगे कि मैं इस खबर का सारांश भी प्रदान करूं?

1
4 views