logo

ஆவடி அமைச்சரை ஏமாற்றிய நபர் யார் இந்த சஞ்சய் பல கோடி சொத்து குவித்தது எப்படி


தமிழ்நாட்டில் திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்று பின்னர் ஆட்சி அமைத்தது அதில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்ட
சா.மு. நாசர் மாபெரும் வெற்றி பெற்றார்.
அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அவருக்கு பால்வளத் துறை அமைச்சராக பதவி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறு சிறு விமர்சனங்களில் சிக்கிய அமைச்சரை கட்சி மேலிடம் அமைச்சர் பதவியை பறித்தது. அதன் பின்னர் இவர் மாவட்டச் செயலாளராகவும் திமுகவின் தொண்டராகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவர் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பருக்கு ஒன்று என்றால் சும்மா இருப்பாரா முதலமைச்சர்?
தனி டீம் ஒன்றை உருவாக்கி அமைச்சரை பற்றி ஆய்வு செய்யச் சொன்னார். ஆய்வின் போது அமைச்சர் நேர்மையானவரும் நம்பிக்கையானவரும் நண்பருக்கு என்றும் கெடுதல் செய்யக் கூடியவர் அல்ல என்பதையும் இவரது அதிரடியான நடவடிக்கைகளை பிடிக்காத அதிகாரிகள் மற்றும் அரசியல் விரோதிகளின் சூழ்ச்சியே இவரது பதவி பறிப்புக்கான காரணம் என்பதை உறுதிப்படுத்திய டீம் முதலமைச்சருக்கு ரகசிய தகவல்களை கொடுத்தது.
பின்னர் அவருக்கு செப்டம்பர் 28 2024 ஆம் ஆண்டு மீண்டும் அரசின் சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இவர் நேர்மையானவர் என்பதாலே அவ்வப்போதும் சிறிது கோபமும் அடைவார். அதை பயன்படுத்திய எதிர் கட்சிகள் நாசர் அப்படி இப்படி என்று பொய் செய்திகளை பரப்பியும் திரித்தும் வந்தனர். ஆனால் தொகுதிக்கு சென்றால் இவரை பற்றி பேசாத நபரே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவ்வளவு நன்மைகள் செய்துள்ளார். ஆனால் பழமொழி ஒன்று கூறுவார்கள், பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு ஒன்று கேட்டது கருடா சௌக்கியமா என்று, யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லோரும் சௌக்கியம் தான் என கருடன் கூறியது. அதுபோல அமைச்சர் உதவியாளராக இருந்த சஞ்சய் என்ற நச்சுப் பாம்பு ஒன்று அமைச்சர் பெயர் கெடுப்பதற்கு என்று இத்தனை நாள் செயல்பட்டு வந்திருக்கிறார். பாவம் அமைச்சரும் இவரை நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சம். தற்போது அமைச்சர் அவரை பற்றி அறிந்து அதிரடியாக அவரை வெளியேற்றி விட்டார். கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அமைச்சரிடம் சென்று எது கேட்டாலும் எந்த கைமாறும் எதிர்பார்க்காமல் உடனே செய்து கொடுப்பார். ஆனால் சஞ்சயோ அண்ணன் பணம் வாங்க சொன்னார் அதை செய்யச் சொன்னார் இதைச் செய்யச் சொன்னார் என பொய்யாக கூறி அமைச்சருக்கு தெரியாமல் இன்று பல கோடிகள் சொத்து குவித்து வைத்திருக்கிறார். இதை எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். இல்லையெனில் அமைச்சருக்கோ ஆளும் கட்சிக்கோ தான் அவ பெயர் உண்டாகும்.
இவரை நம்பி இருந்த அமைச்சரை இப்படி நம்பிக்கை துரோகம் செய்தாரே என முக்கிய கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனராம். தன்னைத் தேடி குடும்ப சூழ்நிலை காரணமாக டிரான்ஸ்பர் கேட்டால் அமைச்சர் கைமாறு எதிர்பார்க்காமல் உதவி செய்வாராம். ஆனால் சஞ்சய் அதற்கு பணம் பள்ளிக்கூடத்தில் கல்லூரியில் சீட் வேண்டுமென்றால் அதற்கு பணம் என தொட்டதற்கெல்லாம் பணம் பறித்துள்ளாராம். இது மட்டும் அல்லாமல் சிறுபான்மையினர் நலத்துறையில் புரோக்கராக செயல்படும் ஒரு மோசடி நபர் ஒருவரை அமைச்சர் கிட்டவே சேர்க்க மாட்டாராம். ஆனால் சஞ்சய் அவருடன் மறைமுகமாக நட்பு வைத்துக் கொண்டு மறைமுகமாக அமைச்சருக்கு தெரியாமல் அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரிடம் பெரும் தொகை பெற்று வந்துள்ளாராம்.. இவை எல்லாவற்றையும் கண்டுபிடித்த பின்னரே சஞ்சய் ஒரு மோசடி பேர்வழி என தெரிந்து அவரை அமைச்சர் நாசர் துரத்தியுள்ளாரம். நாம் கட்சிக்காரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது சஞ்சய்தான் அமைச்சரின் அவப்பெயருக்கும் அமைச்சர் பதவி பறிப்புக்கும் காரணம். நாங்கள் இதை அமைச்சரிடம் கூறலாம் என்று பலமுறை முயற்சித்தோம் ஆனால் சஞ்சய் அவர் கிட்ட கூட எங்களை நெருங்க விடுவதில்லை. ஐயா ஊருக்கு சென்றுவிட்டார் இங்கு சென்று விட்டார் என்று ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே இருப்பார். சஞ்சயை வெளியேற்றி அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு காரணத்தினால் யாரும் இவரை பற்றி மேலிடத்திற்கு குறை எதுவும் சொல்ல முடியாது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விரோதிகள் குழப்பத்தில் உள்ளனராம். என்னடா நமக்கென்று ஒரு உளவாளி இருந்தானே அமைச்சர் பெயரை கெடுக்க வேண்டும் என்றே திட்டம் போட்டு செயல்படுவானே அவனை எப்படியோ இந்த அமைச்சர் கண்டுபிடித்து துரத்தி விட்டாரே இனி அமைச்சருக்கும் ஆளுங்கட்சிக்கும் எப்படி நாம் அவப்பெயர் எடுத்துக் கொடுப்பது என்று திகைத்துப் போய் உள்ளார்களாம். எது எப்படியோ இனி அமைச்சருக்கு ஆளுங்கட்சிக்கும் நல்ல பெயர் தான் கிடைக்கும் என நம்புகின்றனர் ஆவடி சட்டமன்ற பொது மக்கள்.
மோசடி பேர்வழி சஞ்சையை அமைச்சர் நாசர் துரத்திய பின்பும் மோசடி பேர்வழி சஞ்சய் அமைச்சர் வீட்டு வாசலிலே காத்துக் கொண்டிருப்பதாக தகவல்.

93
4987 views