
மெய்யூர் மஸ்ஜிதே மஹ்மூதிய்யா சொத்துக்கு பட்டா விவகாரம் – ஜமாஅத் தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
மெய்யூர் மஸ்ஜிதே மஹ்மூதிய்யா சொத்துக்கு பட்டா விவகாரம் – ஜமாஅத் தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
செங்கல்பட்டு, அக்.10, 2025:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட மெய்யூர் – சதுரங்கப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள “மஸ்ஜிதே மஹ்மூதிய்யா மற்றும் மதரஸாயே மஹ்மூதிய்யா” வக்ஃப் சொத்துகளுக்கு எதிராக சில தனிநபர்கள் மோசடியாக பட்டாக்கள் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலைமைக்கு எதிராக, ஜமாஅத் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி 27, 2025 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், சப்-கலெக்டர், மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பல மாதங்கள் கழித்து, அந்த மனு குறித்து விசாரணை நேற்று (09.10.2025) திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முத்தவல்லி ஜனாப் S.K.S. முகம்மது அலி சாஹேப் தலைமையில், ஜமாஅத்தார் மற்றும் வக்கீல் B.சலீம் பாஷா (B.A., B.L.) ஆகியோர் கலந்து கொண்டு,
மஸ்ஜித் தரப்பில் வக்காலத்து நாமா,
15 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ பதிலுரை,
200 பக்க ஆவணத் தொகுப்பு,
என அனைத்தையும் சமர்ப்பித்தனர்.
ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை முழுமையாக ஆய்வு செய்த பின், வட்டாட்சியர் அலுவலகம்,
மஸ்ஜித் சார்பாக அளிக்கப்பட்ட மனுவுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் அல்லது
மேலதிக விசாரணைக்காக செங்கல்பட்டு சார்-ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஜமாஅத் நிர்வாகம், “மஸ்ஜித் சொத்துக்கள் மீதான நியாயம் விரைவில் கிடைக்கும்” என்ற நம்பிக்கையுடன்,
“மோசடியாகப் பெற்ற பட்டாக்கள் இரத்து செய்யப்பட வேண்டும்; மஸ்ஜித் பெயரில் சட்டபூர்வ பட்டா வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாய்ப்பில், அனைத்து ஜமாஅத்தார்களும் இறை அருளால் நீதி நிறைவேற வேண்டி துவா செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புடன்,
B. சலீம் பாஷா, B.A., B.L.
செங்கல்பட்டு மாவட்டம்
செல்: 98943 28639