logo

திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலை அச்சத்திலும் பீதியிலும் வாழும் திருவள்ளூர் மாவட்ட பொது மக்கள்

திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலை அச்சத்திலும் பீதியிலும் வாழும் திருவள்ளூர் மாவட்ட பொது மக்கள்

திமுக அரசு பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து தினந்தோறும் கொலை .கொள்ளை. கற்பழிப்பு . திருட்டு. ஆள் கடத்தல். நில ஆக்கிரமிப்பு. என குற்றங்கள் பெருகி வருகின்றன.குறிப்பாக மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறை பெட்டிக்கு ஆசைப்பட்டு பெட்டி பாம்பாய் அடங்கி கிடக்கின்றனர. எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக்
கோட்டடத்திலும் காவல்துறை உயர் பதவியில் இருப்பவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தமிழ் தெரியவில்லை.
தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் தமிழ்! தமிழ்! என்று பெருமை பாராட்டிக் கொள்கிறார். ஆனால் சென்னைக்கு அருகில் புறநகர் மாவட்டமன திருவள்ளூர் மாவட்டத்திலோ எந்த அதிகாரிகளுக்கும் தமிழ் தெரியவில்லை காவல்துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் இந்தி பேசுகின்ற நிலை காணப்படுகிறது. இதனால் காவல்துறைக்கு உட்பட்ட உட்கோட்டங்களில் உள்ள உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கும் போது அவர்களை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிகுமார் அவர்களிடம் புகார் அளித்தால் அதை காவல்துறை அதிகாரிகள் மதிப்பதே இல்லையாம் அதே நேரம் உயர் அதிகாரிகள் அனைவரும் வட மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதால் வட மாநிலத்தைச் சேர்ந்த திருட்டு கும்பல் கிராமப்புறங்களில் திருடுவதை பெருகி வருகின்றனர் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு .நகை .பணம் ஆடு. மாடுகள். இருசக்கர வாகனங்கள்.என தொடர்ந்து தற்போது கிராம பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சமீபத்தில் திருவாலங்காடு அடுத்துள்ள வேணுகோபாலபுரம் கிராமத்தில் மற்றும் புளியங்குன்டா வீரராகவபுரம் மணவூர் கூடல்வாடி நாத்த வாடா பழையனூர் போன்ற பகுதிகளில் இரவில் வீட்டிற்கு வெளியே நிற்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. புளியங்குண்ட கிராமத்தைச் சார்ந்த பார்த்திபன் வேணுகோபால் புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகரன்
போன்ற நபர்களின் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன இது சம்பந்தமாக திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை காவல்துறையே வட மாநில மற்றும் லோக்கல் திருடர்களுக்கு வழி காட்டுவது போல தெரிகிறது அதே நேரம் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு அதிகம் காணப்படுகிறது தினந்தோறும் மின்வெட்டு இருப்பதால் திருடர்களுக்கு இது வசதியாக உள்ளது இது சம்பந்தமாக காவல் துறையைச் சார்ந்த உயர் அதிகாரி மட்ட குழுவிடம் பேசியபோது நாங்கள் என்ன செய்ய முடியும் ஆளுங்கட்சி நடத்துகின்ற கூட்டத்திற்கு பாதுகாப்பளிப்பதா தினந்தோறும் ஏதாவது ஒரு கூட்டம் நடத்துகின்றனர் அதற்கு பாதுகாப்பு அளிப்பதே தலைவலியாய் இருக்கிறது அல்லது எதிர்கட்சிகள் நடத்துகின்ற கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதா இல்லை தினந்தோறும் சாதி வன்கொடுமை பிரச்சனை. ஆள் கடத்தல் பிரச்சனை. மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு பேர் போன அரசியல்வாதிகள் பிரச்சனை .இவற்றை நாங்கள் கண்காணிப்பதாக என குழம்பி போய் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் என்று எப்போது எந்த ராத்திரியில் திருடன் வந்து கழுத்தை அறுப்பான் நகையை பறிப்பான். பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக வருவார்களா! வயதான மூதாட்டிகள் வீடுகளில் தனியாக இருப்பதற்கும் பயந்து கொண்டு உயிர் பயத்தோடு வாழ்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நான்காண்டுகள் திமுகவின் சாதனை இதுவாகத்தான் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

75
4101 views