logo

சென்னை – இராஜா அண்ணாமலைபுரத்தில் தற்போது நவீன வசதிகளுடன் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்கா !

சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 42.45 கோடி ரூபாய் செலவில் தொல்காப்பியப் பூங்காவானது தற்போது நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பல்வேறு வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவினை தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த தொல்காப்பிய பூங்காவில் கொன்றை மரக்கன்றை நட்டு வைத்ததோடு, பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட நடைமேம்பாலத்தையும் (Skywalk) பார்வையிட்டார்.
அப்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.நா. எழிலன், திரு. த. வேலு, திரு. வி.ஜி. ராஜேந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., ஆகியோருடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
-திருச்சி பிரசன்னா

12
68 views