
தேனி தெற்கு மாவட்ட தமாகா கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.
தேனி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஓ. ஆர்.குமரேசன் தலைமையில் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கே.என். எம்.அப்பாஸ், பி.வி.பரமசிவம், ஜீ.வி.அன்பழகன், பி. கொடியரசன் முன்னிலை வகித்தனர். கலந்தாய்வுக் கூட்ட முடிவில் ஓ.ஆர்.குமரேசன் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளரை நியமிப்பது குறித்து கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களது ஆலோசனையின் பேரில், தேனி தெற்கு மாவட்டத்திற்கு பொறுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கே.என். எம்.அப்பாஸ், பி.வி.பரமசிவம், ஜீ.வி.அன்பழகன், பி. கொடியரசன் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள். மாவட்டத்தில் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு பரிந்துரை செய்ய இவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விரைவில் மாவட்ட அளவில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது குறித்தும், அவர்களைத் தேர்வு செய்வது வரை பொறுப்புக் குழுவினர்கள் கட்சியின் அனைத்து பணிகளையும் கவனிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது என்றார்.
கூட்டத்தில் உத்தமபாளையம் வட்டார தலைவர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், கூடலூர் ஏ. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கோட்டை குமார் நன்றி கூறினார்.