logo

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களால் பறிபோகும் அப்பாவி ஏழை மக்களின் உயிர்கள் பணம் பறிக்கும் பயிற்சி மருத்துவர்கள்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களால் பறிபோகும் அப்பாவி ஏழை மக்களின் உயிர்கள் பணம் பறிக்கும் பயிற்சி மருத்துவர்கள்


சென்னை தலைநகரில் அமைந்துள்ளது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வறுமை கோட்டின் கீழ் இருக்கும் ஏழை எளிய மக்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர் தலைசிறந்த மருத்துவர்கள் தலைக்கனம் இல்லாத மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே. சாந்தாரம் அவர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதாலே கிராம மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டு சிறந்த சிகிச்சை மக்களுக்கு தரவேண்டும் என்று போராடிக் கொண்டுள்ளார் ஆனால் அவரே சொன்னால் கூட தலைக்கனம் உள்ள பயிற்சி மருத்துவர்கள் சிலர் யார் சொன்னால் எங்களுக்கென்ன எவன் செத்தால் எங்களுக்கு என்ன நாங்கள் ஜாலியாக கைபேசியை பொழுதுபோக்கு செலுத்துவதும் இரவு நேரங்களில் ஒருங்குவதும் தான் எங்கள் வேலை செவிலியர்களுக்கு பதிலாக இரவு நேரங்களில் தூய்மை பணியாளர்களை வைத்து முதல் உதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது நோயாளிகளுக்கு அணிந்திருக்கும் ஆக்சிஜன் முகமூடி அகற்றுவது மாற்றுவது என செவிலியர்கள் செய்ய வேண்டியவை எல்லாம் தூய்மை பணியாளர்களை வைத்து செய்ய வைக்கின்றனர் பயிற்சி மருத்துவர்கள் இதில் ஆக்சிஜன் பலூனை கூட நோயாளிகளின் உறவினர்களின் கையில் கொடுக்கப்பட்டு அவற்றை கையாள சொல்கின்றனர் இவை கையாள தெரியாமல் நோயாளிகளின் உறவினர்களோ திணறி வருகின்றன பெயருக்கு தர்மாஸ்பத்திரி என்று சொல்லப்பட்டாலும் அது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு தான் பொருந்தும் அதுவும் மருத்துவர் ஆலோசனை மருந்து மாத்திரைகள் தான் இலவசமே தவிர மற்ற அனைத்திற்கும் பணம் செலுத்தி தான் சிகிச்சை பெற வேண்டும் அருகில் உள்ள மற்ற மாநில மக்களுக்கு இது பொருந்தாது அவர்கள் பணம் செலுத்தி தான் சிகிச்சை பெற வேண்டும் இச்சூழலில்ஏற்பட்டுள்ளது இதையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அரசு மருத்துவமனையில் நடக்கும் மர்மங்களை அமைச்சரோ அல்லது கல்லூரி முதல்வருக்கோ தெரியவில்லை என்று அங்கிருக்கும் நேர்மையான சில அரசு ஊழியர்கள் பரபரப்புக் குற்றச்சாட்டு முன் வைத்தனர் கேஸ்வாலிட்டியில் சிகிச்சைக்காக வரும் ஆந்திரா தெலுங்கானா பீகார் கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தின் இருந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பேரம் பேசி பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்ற நாராம் ஒப்பந்த மருத்துவர்களிடம் எதற்காக என்று கேட்டபோது அவர்களுக்கு சரிவர ஊதியம் கொடுப்பதில்லை எனவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிவதால் அவர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர் இதனால் மருத்துவமனை முதல்வர் பரிந்துரைத்தாலும் அந்த நோயாளிகளை கண்டு கொள்வதில்லையாம் முதல்வர் சம்பளம் கொடுக்கிறாரா எங்களுக்கு நாங்களே ஒப்பந்த முறையில் பணியாற்றுகிறோம் என்கின்றனர் ஒப்பந்த மருத்துவர்கள் புனிதமான சேவையை இவ்வாறு கொச்சைப்படுத்துகின்றனர் அங்கிருக்கும் பயிற்சி மருத்துவர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுவது என்னவென்றால் இது போன்ற மருத்துவர்கள் மீது கொலை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் மருத்துவர் என்ற புனித சேவையில் இருந்து கொண்டு இது போன்று ஏழை எளிய மக்களை மிரட்டி பணம் பிடுங்கும் மருத்துவர்கள் இருக்கும் வரை அரசு மருத்துவமனை என்றும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்கின்றனர் இதற்கு ஆதாரமாக கேஸ்வாலிட்டி முழுவதும் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் ஒப்பந்ததாரர்கள் என்று தெரியவந்தது அரசு மருத்துவர் ஒருவர் அல்லது இருவர்தான் இருப்பார்களாம் இதற்கெல்லாம் ஆதாரமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து தலையில் பலத்த காயங்களுடன் கிரி பாபு வயது 39 என்ற நபரை சுமார் மூன்று நாட்களுக்கு மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்து அதன் பின்னர் ஏழை குடும்பத்தினர் என்பதால் பணம் செலுத்தி முடியாத கொட்டாயத்தில் இருந்தனர் பின்னர் அரசியல் பிரமுகர் ஒருவர் பரிந்துரையின் பெயரில் மருத்துவமனை முதல்வரிடம் அனுமதி கேட்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 29/09/2025 அன்று இரவு சுமார் 11.20 மணி அளவில் நோயாளியை மருத்துவமனையில் அழைத்து வந்த பின்னல் சுமார் ஒரு மணி நேரம் எந்த ஒரு சிகிச்சையும் அளிக்காமல் அங்கும் இங்கும் அலைந்த படியே இருந்துள்ளார்கள் மருத்துவர்கள் அவர்களிடம் கேட்டாள் தாய் படிவம் எழுதி முடித்தால்தான் சிகிச்சை செய்வோம் அதுவரை அவர் செத்தே போனால் கூட நாங்கள் செய்ய மாட்டோம் என்றனர் பயிற்சி மருத்துவர்கள் இதைக் கேட்டு அதிர்ந்தனர் அப்போலோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் செவிலியரும் ஒரு மணி நேரமாக ஆக்சிஜனை கொடுத்துக் கொண்டே இருந்தனர் அப்போலோ மருத்துவமனை செவிலியர் அதன் பின்னர் ICU மாற்றுங்கள் என்று அங்கே பத்து நிமிடங்கள் தூய்மை பணியாளர்கள் எவ்வாறு ஆக்சிஜன் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் நோயாளியிடம் இருந்து காத்துக்கொண்டிருந்தனர் இதைக் கண்டும் காணாமல் கைப்பேசியில் பொழுதுபோக்கு வீடியோக்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர் மருத்துவர்கள் அதன் பின்னர் இசிஜி எம்ஆர்ஐ எக்ஸ் ரே எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு நோயாளியின் உறவினர்கள் இப்பதான் எம்ஆர்ஐ இசிஜி எக்ஸ்ரே என் அனைத்தும் தனியார் மருத்துவமனையில் எடுத்துக் கொண்டே வருகிறோம் முதலில் சிகிச்சை மேற்கொள்ளுங்கள் சிகிச்சையில் பலன் இருந்தால் அதன் பின்னர் எல்லாம் செய்யலாமே என்பதற்கு நான் டாக்டரா நீ டாக்டரா வாய மூடு முதல்ல எல்லாம் எடுத்துனு வந்தான் இல்லைன்னா பார்க்க முடியாது என்று உள்ளனர் மருத்துவர்கள் அதன் பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்த நபரை தூய்மை பணியாளர் ஒருவர் அவரை தள்ளிக் கொண்டு அங்கும் இங்குமாக நீண்ட நேரம் அலைக்கழித்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது அதை கூறினால் கூட கண்டுகொள்ளாமல் மருத்துவர் இருந்துள்ளார்கள் இதன் பின்பு காலையில் மீண்டும் மருத்துவமனை முதல்வருக்கு அழுத்தம் செல்ல மருத்துவர்கள் அதே அலட்சியத்தோடு செயல்பட்டு அந்த நபரை இருக்க குணம் இல்லாத மருத்துவர்களால் மாலை ஐந்து மணி அளவில் இறந்து போய் உள்ளார் உறவினர்களோ கதறி அழுத்தியபடியே மூன்று நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம் நன்றாக இருந்தால் ஒரு நாள் கூட துப்பாற்ற அரசு மருத்துவர்கள் உயிருடன் என் கணவரை கொன்று கொன்று விட்டார்களே என்று காதறி கதறி அழுதுள்ளனர் குடும்பத்தினர் இது மருத்துவமனையில் அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் உரிமையை ரத்து செய்வது மட்டுமல்லாமல் அவர்கள் மீது குற்றவியல் வழக்குகளை தொட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் அப்போதுதான் அரசு மருத்துவமனையில் அலட்சியம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் இதனால் தான் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளும் அரசு மருத்துவமனை நோக்கி செல்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பாரா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என காத்திருந்து பார்ப்போம்

69
3854 views