
7 கோடியே 29லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ
கும்மிடிப்பூண்டி,செப்.25: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் பெத்திக்குப்பம் அருகே 7கோடியே 29லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
2025 2026 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 7கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ரமேஷ், பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பிறகு பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது. நிகழ்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் முதல் கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், அப்துல் கரீம், நஸ்ரத் இஸ்மாயில், காளிதாஸ், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாஸ்கரன், பெத்திக்குப்பம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜீவா செல்வம், துணை தலைவர் குணசேகரன் ,கும்மிடிப்பூண்டி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசாருதீன், பதிவரை எழுத்தர் ரவி, வரி தண்டலர்கள், ரங்கநாதன், பொது சுகாதார மேற்பார்வையாளர் ஹரிபாபு, ஒப்பந்ததாரர் காரம்பேடு ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.