
ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர் பேட்டையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஒன்றியம், பென்னாலூர்பேட்டை கிராமத்தில் 6 ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பென்னாலூர் பேட்டை பேருந்து நிலையம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, பேருந்து நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு,புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.
மேலும் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், பென்னாலூர் பேட்டையில் பழுதான பேருந்து நிலையத்தை அகற்றி விட்டு, புதிதாக கட்டுவதற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டு, இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பூண்டி பிடிஒக்கள் செல்வி, சுலோச்சனா ஆகியோர் தலைமை தாங்கினார். பூண்டி தி மு க ஒன்றியச் செயலாளரும் வழக்கறிஞருமான ஜான் (எ) பொன்னுசாமி, அவைத்தலைவர் ராகவன், முன்னாள் ஊராட்சி தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு,புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பாலாஜி, வழக்கறிஞர் சாய் குமார்,விஜயமாலா பாஸ்கர், சரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பூண்டி திமுக ஒன்றிய நிர்வாகிகள் சிவய்யா, வேல்முருகன், சீனிவாசலு, ரகு, அரசு வக்கீல் வெஸ்லீ, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தில்லை குமார், விஜயன், வழக்கறிஞர் காண்டீபன், பாலாஜி, வழக்கறிஞர் சாய் குமார்,விஜயமாலா பாஸ்கர், சரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.