logo

திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் ஆய்வு செய்வது தொடர்பாக இன்று (18.09.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் 16726 எண்ணிக்கையுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit-8637, Control Unit -3899, VVPAT-4190) ஆய்வு செய்யப்பட்டன. மேற்படி ஆய்வின் போது திருச்சிராப்பள்ளி, வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), தனி வட்டாட்சியர் (தேர்தல்), துணை வட்டாட்சியர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியகட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
-திருச்சி பிரசன்னா

43
3020 views