தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் முன்பு நாய்கள் அட்டகாசம் – நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் முன்பு நாய்கள் அட்டகாசம் – நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஊராட்சி எல்லைக்குள் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு அடிக்கடி நாய்கள் திரண்டுகொண்டு அட்டகாசம் செய்வதால், பக்தர்களும், பொதுமக்களும் அச்சத்துடன் வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் கோவிலுக்கு அதிகம் மக்கள் வரும் நிலையில், நாய்கள் துரத்துவதால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள், “கோவில் எதிரே உள்ள சாலையில் நாய்கள் அட்டகாசம் செய்வதை நகராட்சி உடனடியாக கவனிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்குமா என்பது பொதுமக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது.
---- சமூக ஆர்வலர் விஜயா