logo

தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் உறுதிமொழி

தேனி மாவட்டம் கம்பத்தில், திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள்
உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழா கம்பத்தில் மாவட்ட செயலாளர் ப. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன்,

சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்டத் தலைவர் தலைமையில் தோழர்கள் உறுதிமொழி ஏற்றனர். கூட்டத்திற்கு

மாவட்ட துணைத் தலைவர் க.சிவா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முத்தமிழன், கேகே பட்டி கிளை தலைவர் முருகன், காப்பாளர் கருப்பு சட்டை நடராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் குமரேசன், கூடலூர் கிளைக் கழகத் தலைவர் நாகராசன்,
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர் மணி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்பாஸ், எஸ்டிபிஐ கட்சி ஏரியா செயலாளர் சிராஜுதீன், திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் கலைகமால், திராவிடர் கழக மாணவரணி தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பம் சிக்னல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திரு உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தி, பெரியார் புகழ் ஓங்க கோஷமிட்டனர். இதை அடுத்து அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி
ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என்ற அன்பு நெறியையும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்,
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன், மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும், சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன் என அனைவரும் விதிமுறை எடுத்துக் கொண்டனர்.

6
1225 views