
நீர் வழிப்பாதைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை
ஆர்.டி.ஐ மனுவுக்கு நீர்வளத்துறை பதில்
நீர் வழிப்பாதைகளில் கனகரக வாகனங்கள் செல்வதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது என தகவல் அறியும் உரி மைச் சட்ட மனுவிற்கு நீர் வளத்துறை பொறியாளர் பதிலளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கண் மாய்கள், ஓடைகள், கால்வாய் உள்ளிட்ட நீர் வழிப்பாதைகளில் கனரக வாகனங்கள் மூலம் கனிமவளக் கொள்ளை நடக்கிறது.
நீர்நிலைகளில் பெரிய டாரஸ் லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மணல், கிராவல் மற்றும் கற்கள் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஞானசேகரன், கருப்பு மணியக்காரன் கம்மாய்க்கு செல்லும் வகுத்துமலை நீர்வரத்து ஓடையில் கனரக வாகனங்கள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
நீர் வழித்தடங்களை கனரக வாகனங்கள் பாதையாக பயன்படுத்த முடியுமா? என பெரியாறு வைகை வடிகால் கோட்ட செயற்பொறியாளருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கோரி இருந்தார்.
இந்த மனுவிற்கு பொது தகவல் அலுவலர் மற்றும் பெரியாறு - வைகை வடிநிலக் கோட்டம் நா. ஆண்டிப்பட்டி பிரிவு உதவி பொறியாளர் அனுப்பியுள்ள பதிலில் தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு சட்டம் 2007
(Tamil Nadu Prodection of Tanks Act & 2007)&-ன் படிநீர்வரத்துக்கால்வாய் களில் கனகர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
எனவே நீர்வழி பாதையை பயன்படுத்தாமல் கனிமவள விதிகளுக்கு உட்பட்டு கனிமங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.
இதன் மூலம் சட்டப்படி கண்மாய்கள், கால்வாய்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் டாரஸ் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வது சட்டவிரோதம் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஞானசேகரன் கூறுகையில், நீர்வழிப்பாதைகளில் கனகரவாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என பதிலளித் துள்ளனர்.
வகுத்துமலை ஓடை வழி யாக 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளுக்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இனி கனரக வாகனங்கள் இந்த வழியில் செல்ல முடியாது. இதே போல் கண்மாய், ஓடைகளில் ஜே.சி.பி. மூலம் டாரஸ் லாரிகளில் மணல் கொள்ளை மற்றும் மண் திருட்டுகள் நடக்கிறது.
இதையும் தடுக்க வேண்டும். இனி அதிரடி தொடரும், என்றார்.