“சிக்னல் சிதைவால் விபத்து அச்சம் – அரசு எப்போது விழித்தெழும்?”
இலஞ்சி – சிக்னல் விளக்குகள் தலைகீழாக கிடக்கின்றன
தென்காசி மாவட்டம் இலஞ்சி – தென்காசி சந்திப்பு பகுதியில் உள்ள நடுப்பகுதியில் போலீஸ் பூத் அருகே அமைக்கப்பட்டிருந்த சிக்னல் விளக்குகள் தற்போது தலைகீழாகக் கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதி வழியாகப் பயணம் செய்பவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் வகையில் விளக்குகள் சீரமைக்கப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்புக்காக சிக்னல் விளக்குகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– ரஷீத் கான், சமூக தாகம், தென்காசி மாவட்டம்