தமிழக சட்டமன்ற தேர்தல் 2௦26 முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவு
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் 2௦26 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,. மேற்படி புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று திருச்சிராப்பள்ளி (02-09-2025) மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட கண்ட்ரோல் யூனிட் 450, விவி பேட் 200 மேற்படி இயந்திரங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை திறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஆட்சியாளரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சாலை தவ. வளவன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயப்ரகாஷ், துணைவட்டாட்சியர் சுமதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் ஆகியோரின் முன்னிலையில் நடைப்பெற்றது.
-திருச்சி பிரசன்னா