logo

"பிள்ளையார் சதுர்த்தி: தாம்பரத்தில் காவல் துறை – பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடல்"

தாம்பரம் தொகுதியில் காவல் துறை - பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடல்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் தொகுதியில், வரவிருக்கும் பிள்ளையார் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல் துறை சார்பில் உள்ளூர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. விழா ஊர்வலம் நடைபெறும் இடங்கள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், பக்தர்கள் எந்தவித சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை உறுதியளித்தது.

இந்த கலந்துரையாடலில் சண்முகம் ரோடு பள்ளிவாசல்,கஸ்தூரிபாய் நகர், கிருஷ்ணா நகர், கடப்பேரி, ரமேஷ் நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வை ஏசி நெல்சன் அவர்கள் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் முன்னெடுத்தனர்.

275
9560 views