logo

“மழை பெய்தாலே போக்குவரத்து நெரிசல்! திருநீர்மலை சாலை சோதனை”

திருநீர்மலை சாலையில் மழைநீரால் மக்கள் அவதி

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை சாலையில், ஸ்ரீ லேடி M. வெங்கடசுப்பா ராவ் பள்ளி அருகில், மழை பெய்யும் போதெல்லாம் சாலையில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் காவாய் துவாரங்களை (டிரெயினேஜ் ஹோல்) சரியாக திறந்து வைக்காமல் மூடி விட்டு செல்லும் காரணத்தால் மழைநீர் தேங்கி சாலைகள் சேதமடைந்து, பொதுமக்களின் தினசரி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பாதையில் தாம்பரம் மாநகராட்சி மேயர் நான்கு முறை சென்று வந்திருந்தும், மேலும் அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரும் தினமும் அந்தச் சாலையில் பயணம் செய்தாலும், இப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் பல முறை வந்து காவாய் துவாரங்களை திறந்து, தண்ணீரை காவாய்க்காலில் செல்ல வழிவகுத்திருந்தனர். ஆனால் தற்போது அந்த துவாரங்கள் எங்கே இருப்பதென கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய மழையாலேயே நீர் தேங்கி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

203
5098 views