logo

‘தாயுமானவர்’ காலை உணவு திட்டத்தை திருச்சியில் தனது தொகுதியில் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவச் செல்வங்களின் பசிப்பிணி அகற்றி - அனைவரும் ஆர்வமுடன் கல்வி கற்க அடித்தளமிடும் தாயுமானவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படும் 2,430 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3,05,00 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, தனது திருவேறும்பூர் தொகுதியில் உள்ள கூத்தைப்பார் பேரூர் - கைலாசபுரம், பாய்லர் பிளாண்ட் நடுநிலைப்பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு உணவு பரிமாறி, திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
-திருச்சி பிரசன்னா

40
954 views