திருநெல்வேலியில் பிரமாண்டமாக நடைப்பெற்ற பாரதியஜனதா கட்சி தமிழ்நாடு தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு
நேற்றைய தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக தமிழ்நாடு தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு, மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.தமிழக பாஜகவின் பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி, திரு. அரவிந்த் மேனன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
என்.டி.ஏ தலைமையில் தமிழ்நாட்டின் குரல் வலிமையடைந்து, 2026 தேர்தலில் வெற்றி பெற்று, வளர்ச்சி, வாய்ப்புகள், கலாச்சார பெருமையுடன் தமிழ் மக்களின் வாழ்க்கையை உயர்த்தி, மாநிலத்திற்கும் தேசத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டது.
-திருச்சி பிரசன்னா