BREAKING: ஸ்டிரைக் தொடரும்.. தமிழக அரசுக்கு நெருக்கடி...
#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.
பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், பல லட்சம் பேர் வந்து செல்லும் பொதுவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் சற்றுமுன் அழைப்பு விடுத்தது. ஆனால், அதை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள், ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.