logo

பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை, உபகரணங்கள்

ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழ க்கு ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே.ரமேஷ்ராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜெ.கோவிந்தராஜன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மாலை பல்வகை விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமாராவ் தலைமை யில் நடைபெற்றது. ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித், கிளை செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளஞரணி துணை அமைப்பாளர் எட்வர்ட் துரை அனைவரையும் வரவேற்றார்.இவ்விழாவில் முன்னாள் மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் தில்லைகுமார், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீராம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் விஜயன் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்று, பல்வகை விளையாட்டுக ளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் வீரர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு சீருடை மற்றும் உபகரணங்களை வழங்கினர். இதில் இளைஞரணி பாக முகவர்கள் பிரதீப், மனோஜ், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் நவீன், ரீகன் மற்றும் ஒதப்பை ஊராட்சியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

15
419 views