
“பள்ளியில் புர்கா தடை – அரசின் மதச்சார்பின்மை எங்கே?”
பர்தாவுக்குத் தடை! – மத சுதந்திரத்தை மீறும் செயல்!!
போடிநாயக்கனூர் அருகேயுள்ள ஐ.கா.நி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரியர் பர்தா (புர்கா) அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளித் தலைவர் செந்தில் தியாகராஜன் அவர்கள், பர்தா அணிவதை மதம் சார்ந்த முட்டாள்தனமாகவும், பள்ளிக்குள் அனுமதிக்க முடியாத செயலாகவும் கூறியதாகும் ஆடியோ கிளிப்பும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், “இஸ்லாமின் தெரு பூட்டும் பழக்கங்கள் பள்ளிக்குள் வரக்கூடாது” என்றதுபோன்ற கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து மதச் சுதந்திரம், வேலை வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மையின் மீதான உரிமைகள் என்ற அடிப்படையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முந்தைய காலங்களில் கர்நாடகாவில் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது போன்று, தற்போது தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெறுவது அதிருப்திக்குரியது.
மத அடிப்படையில் வேறுபாடு காட்டும் வகைபோன்ற செயல்களுக்கு எதிராக அரசு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.