logo

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நாலு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு

கும்மிடிப்பூண்டி,ஜூலை.29: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எகுமதுரை,தோக்கம்மூர், பூவலை, கண்ணம்பாக்கம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். முகாமிற்கு திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மணிபாலன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர், தோக்கம்மூர் ஊராட்சி முன்னாள் தலைவர் து.மணி, திமுக நகர செயலாளர் அறிவழகன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அங்கமுத்து,கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்த மன்னன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் தந்த மனுக்களுக்கு 45நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிட்டார்.
தொடர்ந்து இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

8
158 views