கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று (ஜூலை 28) மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாற்றம், புதிய பட்டா விண்ணப்பம், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் போன்ற பல்வேறு மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்டது.