logo

பஞ்சமி நிலங்களை மீட்டு, இடமில்லா ஏழைகளுக்கு வழங்க, மனு கொடுக்கும் போராட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, பஞ்சமி நிலங்களை மீட்டு, இடமில்லா ஏழைகளுக்கு இடம் வழங்க, உத்தமபாளையம் கோட்டாட்சியரிடம் மனு வழங்கும் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கூடலூர், கம்பம், கோம்பை, பண்ணைப்புரம்.போன்ற ஊர்களில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து அவற்றை ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வட்ட வழங்க கோரி உத்தமபாளையம் கோட்டாட்சியருக்கு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோபால் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றிய செயலாளர் செம்மலர், ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமி, மாவட்ட குழு, அமிர்தம், ஐயூப்கான் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் முல்லை முருகன் துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து உரிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியும் கோசங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் இஎம்எஸ் அபுதாஹிர் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் சையத் முஹமத் இடம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை மொத்தமாக வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

20
1604 views