
விதவை பெண்ணிடம் தங்க நகையை ஆட்டைய போட்ட வாடிப்பட்டி
இன்ஸ்பெக்டர் வளர்மதி....
திராவிட மாடல் ஆட்சியில், காவலர் களே களவாணிகளான ஒரு சம்பவம் மதுரை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது. தனது தங்க நகை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஒரு விதவை பெண்ணின் நகையை மீட்டு அந்த நகையின் ஒரு பகுதியை ஆட்டை போட்ட பெண் காவல் ஆய்வாளரின் சுயரூபத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மதுரை மாவட்டம், டி.வாடிப்பட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த மருது பாண்டியம்மாள் என்பவர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாராக அனுப்பி இருக்கிறார். மேலும் நடந்த கொடுமைகளை நம்மிடம் விளக்கமாக விவாதித்தார். தன்னுடைய தாய், தந்தை, கணவர் மூவரும் ஏற்கனவே இறந்து விட்டார்கள். தற்போது ஆதரவற்ற நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எனது தாயாரின் அடையாளமாக இரண்டரை பவுன் நெக்லஸ் மற்றும் 27 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தேன்.
அதனை எனது வீட்டில் அருகில் உள்ள சண்முகப்பிரியா என்பவர் திருடிவிட்டார். இதுகுறித்து கடந்த மே மாதம் தமிழ்நாடு போலீஸ் சிட்டிசன் பேட்ரோல் HAM25231429 ல் பதிவு செய்திருந்தேன். அதேபோல் மே மாதம் இரண்டாம் தேதி அன்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் காணாமல் போன இரண்டு அரை பவுன் நெக்லஸ் மற்றும் 27,000 ரூபாய் ரொக்க காணவில்லை என்று நேரில் சென்று புகார் அளித்திருந்தேன் (FIR. 124/2025) பிறகு இது தொடர்பாக சண்முகப்பிரியாவிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர்நகையை திருடியதை ஒத்துக் கொண்டு விட்டார். அதன் பின்பு நகையை யாரிடம் கொடுத்தாய் என்று கேட்டபோது மதுரையில் உள்ள நகைக்கடை பஜாரில் உள்ள மங்கலம் தங்க நகைக் கடையில் விற்றதாக சொன்னதும், அந்த நகைக் கடைக்கு வாடிப்பட்டி காவல் துறையைச் சார்ந்த க்ரைம் போலீசார் கண்ணன் மற்றும் பழனி ஆகியோர், என்னையும் சண்முகப்பிரியாவையும் அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட நகை கடையில் சென்று விசாரித்த போது திருட்டு நகை வாங்கியுள்ளதை காவல்துறையால் உறுதி செய்தது.
அந்த நகைக்கடையில் இரண்டு பவுன் 916 நெக்லஸ் மற்றும் அரை பவுன் 916 ஜிமிக்கி ஆகியவைகளை கைப்பற்றி வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு திரும்பினோம். அன்று வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி அவர்கள் எஃப் ஐ ஆர் ல் திருத்தம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார் என்னவென்று கேட்டபோது இரண்டு பவுன் நெக்லஸ் மட்டும் FIR ல் பதிவு செய்கிறேன் அதே போல் நான் 1/2 பவுன் நகையை வைத்துக் கொள்கிறேன். இந்த இரண்டு பவுன் நெக்லஸை நீதிமன்றத்தில் return of property போட்டு வாங்கியதற்கு பின்பு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வந்து என்னிடம் இருக்கும் 1/2 பவுன் ஜிமிக்கியை வாங்கிக் கொள். நான் உனது அம்மா மாதிரி என நம்பிக்கை வார்த்தைகளில் சொல்லி என்னை போகச் சொல்லிவிட்டார்.
அதன் பின்பு நீதிமன்றத்தில் பதிவு செய்து, கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி இரண்டு பவுன் 916 நெக்லஸை நான் வாங்கி விட்டேன். அதன் பின்பு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் இருக்கும் போது அவர்கள் அன்று சொன்னது எனக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த இரண்டு பவுன் நெக்லஸையும் நான் கையில் வைத்திருக்கும் 1/2 பவுன் ஜிமிக்கையும் அதே நகைக்கடையில் உனக்காக 2.1/2 பவுன் நெக்லஸ் செய்து வைத்திருக் கிறார்கள்.
அதை போய் நாம் வாங்கிக் கொள்வோம் என்று வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி கூறினார். அதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் என் கையில் இருப்பது 916 கேடிஎம் தங்க நகை. இதுகுறித்து தொலைபேசியில் என்னிடம் கிரைம் போலீஸ் கண்ணன் பேசியபோது உன்னுடைய தங்கம் சாதாரண தங்கம் என்று கடைக்காரர் கூறுகிறார். ஆகையால், அந்த நகைக் கடையில் சாதா தங்கத்தில் செய்து வைத்திருக்கிறோம். அதை பேசாம வந்து வாங்கிட்டு வாயை மூடிட்டு பேசாமல் போயிறணும் என்று சொன்னதற்கு பிறகுதான் நான் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந் ஐ.பி.எஸ் அவர்களிடம் நேரில் சென்று இது சம்பந்தமான புகாரினை வார்த்தைகளின் மூலம் எடுத்துரைத்தேன்.
அதன்படி அவரும் (S P ) அதற்கு விசாரணை செய்து உண்மைத் தன்மையை அறிந்ததின் அடிப்படையில், வாடிப்பட்டி காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் அழைத்து நேரடியாக பேசியுள்ளார். அதன் பின்னர் என்னிடம் நீங்கள் (SP) வாடிப்பட்டி காவல் நிலையத்தில் போய் நீங்க வாங்கிக்கோங்க, கொடுத்து விடுவார்கள் என்று எஸ் பி கூறினார்.ஆனால் எஸ் பி அலுவலகத்தினர் சொல்லியும் அதன் பிறகு என்னை காவல் நிலையத்திற்கு பலமுறை வரவழைத்து ஏமாற்றினார்கள். மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து நேரடியாக கூறிய போது நாளை கொடுத்து விடுவார்கள் என்று சொன்னார்கள்.
அதன் பின்னர் வாடிப்பட்டி போலீசார் கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு உன்னை யாரு அங்க போக (எஸ் பி அலுவலகம்) சொன்னாங்க என்று தொடர்ச்சியாக என்னை திட்டிக்கொண்டே இருந்தனர். பின்னர் போயிட்டு நாளைக்கு காலையில் 9:00 மணிக்கு வரச் சொன்னார்கள். அதன் பேரில் கடந்த மாதம் 30 ஆம் தேதி என்னிடம் சாதாரண தங்க ஜிமிக்கியை கொடுத்து இதை வாங்கிக் கொள் என கட்டாயப்படுத்தினார்கள். அதனை நான் வாங்க மறுத்தேன். காரணம்? அது சாதா தங்க நகை. அன்று நகைக்கடையில் கைப்பற்றப்பட்ட நகை கே.டி.எம் நகை என்னுடையது. என்னுடைய தொலைந்து போன நகையும் நகையும் கே.டி. எம் நகை. ஆகையால் எனக்கு கேடிஎம் நகை தான் வேண்டும் என்று கூறினேன்.
வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி ஏற்கனவே நான் என்ன ஜாதி என்று விசாரித்ததின் அடிப்படையில், நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததின் அடிப்படையில்," பரட்சி மயிருக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா? " என்று சாதியைச் சொல்லி மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டினார். உனக்கு 916 தெரிய வேண்டும் அவ்வளவுதானே. சார் இந்த கதவை மூடுங்கள் சார். இந்த பொண்ணுக்கு 916 தெரிவித்து விடுவோம்..." என்று சத்தமாக மிரட்டி பயமுறுத்தி அச்சப்படும் வகையில் அரை பவுன் நகையை கீழே தூக்கி எறிந்து விட்டார்கள். அதன் பின்பு அங்கிருந்து மிகுந்த மன உழைச்சலுடன் வாடிப்பட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே பயத்தோடு ஓடிவந்துவிட்டேன். உடனே இந்த சம்பவம் குறித்து 30.05.2025 அன்று இணைய portal GAM25282613 புகார் செய்தேன். மற்றும் அதே நாளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் சென்றும் புகாரை பதிவு செய்தேன்.
அதன் அடிப்படையில் 23.06.2025 அன்று சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ் அவர்கள் சமயநல்லூரில் இருக்கக்கூடிய காவல் ஆய்வாளரான இளங்கோவன் அவர்களை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து அன்று 23.06.2025 மருது பாண்டியம்மாள் என்பவரை விசாரணை செய்தனர். நான் ஏற்கனவே வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருந்த புகார் மனுவையும் மருது பாண்டியம்மாள் என்பவரிடம் இருந்த புகார் மனுவின் நகலையும் ஒன்றிணைத்து சரிபார்த்ததில் இரண்டரை பவுன் என்ற இடத்தில் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி திருத்தம் செய்யப்பட்டு இருந்ததை சமயநல்லூர் காவல் ஆய்வாளர் இளங்கோவன் கண்டுபிடித்தார்.
அதன் பின் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் தான் தவறு செய்துள்ளனர் அப்படி என்று சம்பந்தப்பட்ட மருது பாண்டியம்மாளிடமும் அவர் துணையாகக் கூட வந்த சகாயம் IAS-ன் மக்கள் பாதை அமைப்பைச் சார்ந்த அமுதா அவர்களிடமும் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் பாண்டியராஜன் அவர்களின் முன்னிலையில் சொன்னார். இதனை அப்படியே டிஎஸ்பி சாருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அறிக்கையையும் அனுப்பிவிட்டார். ஆனால் இன்றைய தேதி வரைக்கும் இது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார் மருது பாண்டியம்மாள் நம்மிடம்.