கம்பம் நகர இந்து எழுச்சி முன்னணி செயற்குழுக் கூட்டம்
கம்பம் நகர இந்து எழுச்சி முன்னணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நகர துணை தலைவர் திரு அன்பு ஜீ தலைமை தாங்கினார்.நகர அமைப்பாளர் திரு தங்க ரமேஷ் ஜீ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வழிகாட்டியாக நகர பொருளாளர் திரு ஜெயராம் ஜீ அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டினார். நாளை நடைபெற உள்ள தேனி நகர இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 10-ம் ஆண்டு ஶ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்திற்கு கம்பம் நகர பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.எதிர் வரும் கம்பம் நகர் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பம் நகர இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.