logo

CPIM ன் எம்.பி,சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி...

மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை பல மாதங்களாக சிறுபான்மை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படாதது குறித்து நாடாளுமன்றத்தில் CPIM ன் சு.வெங்கடேஷ் எம்.பி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பதில் அளித்துள்ளார்.ஜனவரி 2025 இல் இருந்து நிலுவையில் இருந்த கல்வி உதவி தொகைக்கு தற்போது ஒப்புதல் பெறப்பட்டு வழங்கப்பட துவங்கி இருக்கிறோம் என அமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார்.

சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதையே நாங்கள் கண்டித்து இருந்தோம். அது தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்று வருபவர்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கே ஆறு மாதங்களுக்கும் மேலாக தாமதமாகிறது என்றால் எவ்வாறு அந்த மாணவர்கள் தங்கள் ஆய்வு படிப்பை தொடர முடியும்?.ஆனால் தற்போது ஒப்புதல் தரப்பட்டு விட்டதாக அமைச்சர் கூறி இருப்பது மகிழ்ச்சி என CPIM ன் எம்.பி சு.வெங்கடேசன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் . என்றும் மக்கள் பணியில் தாமோதரன்.

0
51 views