
CPIM ன் போராளிக்கு மக்கள் கடலென திரண்டு வழிநெடுக ,செவ்வஞ்சலி செலுத்தி வருகின்றனர்...
போராளிக்கு மக்கள் கடலென திரண்டு செவ்வஞ்சலி!
நேற்று மதியம் சரியாக 2.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து துவங்கிய தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களின் இறுதி ஊர்வலம் திருவனந்தபுரம் மாவட்ட எல்லையை கடக்கும் போது நள்ளிரவு 12 மணி. கொல்லம் மாவட்டத்தை கடந்து ஆலப்புழா சென்றடைய இன்று மதியம் 12 மணியானது. சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 22 மணி நேரம்.
வழி நெடுகிலும் கட்சித் தோழர்களும் பொது மக்களும் விண்ணைப் பிளக்கும் முழக்கங்கள் எழுப்பி 85 ஆண்டு காலம் அரசியல் வாழ்வில் ஈடுபடுத்திய தங்கள் தோழனை ஒரு நொடியேனும் காண காத்திருந்தனர்.
அதிக நேர காத்திருப்போ, மழையோ அவர்களை அசைக்கவில்லை. காரணம் தோழர் வி.எஸ் மீதான அன்பு. சிறுவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் சுதந்திர போராட்ட வீரரை, சிபிஐ(எம்) ஸ்தாபக தலைவர்களில் ஒருவரை, முன்னாள் முதல்வரை, என்றும் மக்கள் தொண்டனாக செயல்பட்ட அந்த மகத்தான தோழரை காண வந்தனர்.
இன்னும் சில மணி நேரத்தில் புன்னபுர வயலார் போராட்டத்தின் மண்ணான ஆலப்புழாவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மக்கள் தோழருக்கு செவ்வணக்கம். #VSAchuthanandan
என்றும் மக்கள் பணியில் தோழர் தாமோதரன்.