
அனுமதி இல்லாமல் கட்டப்படும்
சர்ச் யை உடனே தடுத்துநிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொதுச்செயலாளர்
திரு மாய லோகநாதன் ஜீ அவர்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் உத்தமபாளையம் வட்டாட்சியரிடம்
மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் கம்பம் மெயின் ரோட்டில், அனுமந்தன்பட்டி ஊர் அருகில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பஸ் நிலைய இடம், தற்போது R.C. கிறிஸ்தவர்கள் தரைமட்டமாக்கி, "கிறிஸ்தவர் சர்ச்" கட்டும் பணி நடந்து வருகிறது. மேற்கண்ட இடத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் சர்ச், சட்டப்படி தேனி மாவட்ட ஆட்சியரிடம் அல்லது சம்பந்தப்பட்ட மன்றங்களில் இருந்து கட்டட அனுமதி பெற்றதா, இந்த இடம் R.C கிறிஸ்தவர்களின் சொந்தமானதா அல்லது இது அரசு சார்புடைய பொதுநலத்திற்கான இடமா, மேற்கண்ட விவரங்களுக்கு தெளிவான பதிலை எங்களுக்குக் கிடைக்கச் செய்யும்படி, உரிய வழியாக விசாரித்து, உரிய விளக்கம் வழங்க வேண்டும்.இது போன்ற சம்பவங்கள் சமூக ஒற்றுமை மற்றும் மதச்சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது
என்பதையும் வலியுறுத்தி மனு வழங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் திரு மாய லோகநாதன் ஜீ அவர்களுடன் மாவட்ட தலைவர் திரு ராமராஜ் ஜீ, தேனி நகர அமைப்பாளர் திரு கனகுபாண்டி ஜீ, தேனி நகர செயலாளர்கள் திரு அய்யப்பன் ஜீ, திரு அழகு பாண்டி ஜீ
மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு இளம்பரிதி ஜீ மற்றும் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.