logo

தென்காசியில்,கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு சர்வ கட்சியினரின் அஞ்சலி கூட்டம்.

நேற்றைய தினம், தென்காசி காந்தி சிலை அருகில், சுதந்திரப் போராட்ட வீரரும்,மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ,தோழர் V.S.அச்சுதானந்தன் அவர்களுக்கு , சர்வகட்சியினரின் அஞ்சலி கூட்டம் தென்காசி தாலுகா செயலாளர் பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்றது.

தி மு க வின் நகரச்செயலாளரும் தென்காசி நகர்மன்ற தலைவருமான சாதிர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கிட்டப்பா, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் கணேசன், காங்கிரஸ் கட்சியின் நகரத்தலைவர் ஜோதிடர் மாடசாமி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயூப்கான், மாவட்டக்குழு உறுப்பினர் ஆசிரியர் மாரியப்பன், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சங்கரி ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் லெனின்குமார் மற்றும் கிளைச்செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.என்றும் மக்கள் பணியில் தாமோதரன்.

6
293 views