logo

சுதந்திரப் போராட்ட வீரரும்,CPIM கட்சியை நிறுவிய தோழர்களில் ஒருவரும்,கட்சியின் மூத்த தலைவரும்,கேரள முன்னாள் முதல் மந்திரிமான வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள் நேற்று மரணம் அடைந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும்,CPIM கட்சியை நிறுவிய தோழர்களில் ஒருவரும், கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல் மந்திரியுமான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் தனது 101 வயதில், வயது முதிர்வாலும் ,உடல்நலக் குறைவாலும் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு மரணம் அடைந்தார்.

1923-ம் ஆண்டு
அக்டோபர் 20ஆம் தேதி ஆலப்புழா மாவட்டம் புன்னபுராவில் பிறந்தவர், வி. எஸ். அச்சுதானந்தன் அவர்கள்.கேரளாவின் மூத்த அரசியல்வாதியான வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள் மிகவும் எளிமையானவர்.கேரளாவில் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் முதல் மந்திரியாக இருந்தவர்.இது தவிர 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையும்,2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பணியாற்றினார்.பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காதவர்,ஊழலுக்கு எதிராக போராடியவர்.
1980 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் ,நீண்ட காலம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவு கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் பேரிழப்பாகும்.மறைந்த தோழர் வி. எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கு தென்காசி மாவட்டத்தின் தோழர்களின் சார்பாக . செவ்வணக்கம் மக்கள் பணியில் தாமோதரன்.

29
1313 views