
இந்து எழுச்சி முன்னணி சார்பில், கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் ரைஸ்மில் பரமத்தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனத்தலைவர் பொன் ரவி தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் க.ராமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்
மாய லோகநாதன், மாவட்ட செயலாளர்
இளங்கோ பிரதாப், கம்பம் நகர தலைவர்
அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில், கம்பம் நகரில் சென்ற ஆண்டு வைத்த இடங்களில் மட்டும் விநாயகர் திருமேனிகளை வைத்து பிரதிஷ்டை செய்வது,
கம்பம் நகர விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள் விரதம் இருந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும், அரசின் சட்ட திட்டங்களுக்கும், காவல்துறையின் வழிகாட்டுதலின் படி விழாவினை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கம்பம் நகர இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி தேனி, சின்னமனூர்,பெரியகுளம், ஆண்டிபட்டி, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள்
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கம்பம் நகர பொதுச்செயலாளர் பரம பெருமாள் நன்றி கூறினார்.