
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், வரும் 26 ஆம் தேதி, தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க வருகை தர உள்ளதை ஒட்டி கன்னியாகுமரியில் பாஜக ஆலோசனைக்கூட்டம்
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், வரும் 26 ஆம் தேதி, புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்க வருகைதரவுள்ளார். இதையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்த, கன்னியாகுமரி மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் உரையாற்றினார்.
அப்போது, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகன் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு. பொன் V.பாலகணபதி அவர்களும், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திருமதி. சசிகலா புஷ்பா அவர்களும், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு.கோபால்சுவாமி அவர்களும், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் திருமதி. மீனா தேவ் அவர்களும் உடன் இருந்தனர்.
-திருச்சி பிரசன்னா